இலங்கை மத்திய வங்கி ஆயிரம் ரூபா நாணயக்குற்றியினை அறிமுகம் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு உதவி வழங்கும் வகையிலேயே இந் நாணயக் குற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.