ஓகஸ்ட் 2008


லண்டன் நேயரின் விருப்பப்பாடல் – யாரோ எவளே என்னும் மாதவனின் பாடல்

எம்மில் எத்தனையோ பேருக்கு யோகா கற்றுக்கொள்ள ஆசை. ஆனால் ஒரு நல்ல ஆசான் இல்லாததால் அப்படியே விடுபட்டுக்கொண்டு போகின்றது. உங்கள் குறையை போக்கடிக்க இதோ சில்பா செட்டியே உங்களுக்கு யோகா கற்றுத்தருகின்றார் !

பிறகென்ன… சில்பாவை கவனமாக ஒன்றுக்கு பல தரம் உத்துப்பார்த்து விட்டு யோகாவை பிழைவிடாமல் கற்றுக்கொள்ளுங்கள் !!!

Shilpa Shetty Yoga Part1 – ( முன்னுரையும் அறிமுகமும் )

Shilpa Shetty Yoga Part 2

Shilpa Shetty Yoga Part 3

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தின் இறுதியில் அந்தப்படம் எப்படி எடுத்தது என்பதை காண்பித்தார்கள். இது போல் ஜாக்கிச்சானின் படங்களிலும் காண்பிப்பார்கள். அதுபோல் இந்த யோகாவையும் எப்படி எடுத்தார்கள் என்று பார்த்து வையுங்களேன் கீழே.

இன்று பிறந்தநாளை காணும் திருமதி.வேதநாயகி அவர்களை

பிள்ளைகள் பார்த்திபன், மதுரா – மருமகள் வாணி,

பேரப்பிள்ளைகள் அபிராமி, பிரதாபன், நிவேதா – சகோதரர்கள், சம்பந்திமார் மற்றும்

உறவினர் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.

இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு மிகுதியாகவுள்ளது.

தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள், நடுத்தர வயது பெண்களின் தூக்கத்துக்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்களும், அவர்களது தூக்க நேரங்களும் ஏழரை ஆண்டுகாலம் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான ‘இஸ்கெமிக் ஸ்ட்ரோக்’கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 6 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது. எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சாலச் சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட பிணவறையில் வைக்கப்பட்ட பெண் குழந்தையொன்று, 6 மணித்தியாலங்களின் பின் உயிருடன் மீண்ட அதிசயம் இஸ்ரேலில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பமடைந்து 23 ஆவது வாரத்தில் (சுமார் ஐந்தரை மாதத்தில்) மேற்படி குழந்தையின் தாயாரான பாயிஸா (26 வயது), கடுமையான இரத்தப்போக்கு மற்றும் வலி என்பவற்றுக்கு உள்ளாகிய நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெஸ்டர்ன் கலிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டு 6 மணித்தியாலங்களின் பின்னர், அக்குழந்தையின் தாயாரான பாயிஸா இறந்த குழந்தையின் முகத்தை கடைசியாக பார்க்க ஆசைப்படவே குழந்தை தாயிடம் எடுத்து வரப்பட்டது. துணியால் சுற்றப்பட்ட குழந்தையைப் பார்த்த பாயிஸா அக்குழந்தை லேசாக அசைவதாக உணர்ந்தார்.

ஆபத்தான அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாயிஸா, தாய்மை உணர்ச்சியால் உள்ளம் துடிக்க மருத்துவர்களைத் தேடி ஓடினார். இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை உயிருடன் மீண்ட அதிசயத்தால் மருத்துவமனை முழுவதுமே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் பாயிஸா விபரிக்கையில், “”எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. குழந்தை உயிருடன் தான் இருக்கின்றது என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தும் வரை எனக்கு பெரும் பதற்றமாக இருந்தது” என்று கூறினார்.

இந்நிலையில், இது குறித்து குழந்தையின் தந்தையான அலி மக்தூப் விபரிக்கையில், “”குழந்தை எனது உள்ளங்கை அளவுக்கே இருந்தது. அதனால் குழந்தை உயிர் பிழைத்ததை நம்புவதற்கே கஷ்டமாக இருந்தது” என்று கூறினார்.

பொதுவாக இவ்வாறு குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் உயிர்பிழைப்பது 10 சதவீதமே சாத்தியமெனவும் அத்தகைய சம்பவம் ஒன்று 5 வருடங்களுக்கு முன்னரும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறிய மேற்படி மருத்துவமனையின் பேச்சாளர் ஸிவ் பார்பர், ஆனால் பிணவறையில் குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்து 6 மணித்தியாலங்களின் பின் இக்குழந்தை உயிர் பிழைத்தமை உலக அதிசயம் எனத் தெரிவித்தார். 592 கிராம் மட்டுமே நிறையுடைய இக்குழந்தைக்கு குறைமாத குழந்தைகளை பராமரிக்கும் உபகரணத்தில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை மத்திய வங்கி ஆயிரம் ரூபா நாணயக்குற்றியினை அறிமுகம் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு உதவி வழங்கும் வகையிலேயே இந் நாணயக் குற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »