செப்ரெம்பர் 2008


டென்மார்க்கில் வசித்துவரும்

திரு.வ.தெய்வேந்திரன் – திருமதி.அருந்தவராணி தம்பதிகளின்

செல்வப் புதல்வி ‘சோபிதா’ வுக்கு இன்று பிறந்தநாள்!

 

 இன்று பிறந்தநாளை கொண்டாடும் சோபிதாவை – பல் கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென அப்பா, அம்மா, தம்பி கெளதம் மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.

ரசிகர்கள் விரும்பினார்களோ இல்லையோ, ரஜனி விரும்மிய ஒரு நாயகி ஐஸ்வர்யா ராய்.

வரப்போகும் ரஜனியின் படமான ரோபட் படத்தில் அவர் விரும்பிய நாயகி உடன் ஒரு பாட்டாவது பாடிவிட்டார்.

பிறகின்ன ஆரம்பிச்சாச்சு…. இனி மற்றவர்கள் தொடருங்கள்!!!

கூகுள் நிறுவனம் – சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் தனது பத்தாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மிக உன்னதமான சேவை ஒன்றை செய்ய முனைந்துள்ளது.

மக்களின் வேலைவாய்ப்பு, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாதுகாப்பு, வாழ்வியல்… இது போன்ற எந்த துறையிலும் பயன்படக்கூடிய நல்ல ஐடியாவை உங்களிடம் இருந்தே பெற்று அதனை செயல்ப்படுத்தவும் உள்ளனர்.

நாலுபேருக்கு உபயோகமாயிருக்கும் எதாவது ஒரு ஐடியாவை நீங்கள் Google வலைத்தளத்தில் பதிந்து, அதில் உங்கள் ஐடியா நடுவர்களாள் தெரிவு செய்யப்பட்டால்,  10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி அந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளார்கள்.

அடுத்தமாதம் 20 தேதி வரை(October 20, 2008) நமது யோசனைகளை இந்த இணையத்தில் பதிவு செய்யலாம்.

http://www.project10tothe100.com/

நீங்கள் எத்தனை திட்டங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். அனுப்பப்பட்ட திட்டங்களில் சிறந்த 100 திட்டங்கள் 2009 ஜனவரி மாதம் 27 தேதி அறிவிக்கப்படும். அந்த 100 திட்டங்களில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சிறந்த 20 திட்டங்களை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்தெடுக்க உள்ளார்கள்.

அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 20 சிறந்த திட்ட யோசனைகளில் இருந்து 5 திட்டங்களை நடுவர் குழு தேர்தெடுத்து நிறைவேற்ற உள்ளனர்.

 • இது எவ்வளவு மக்களுக்கு பலனளிக்கும் ?
 • இத்திட்டம் அத்தியாவசியமான ஒன்றா? இது எந்த அளவு மக்கள் பிரச்சனைகளை களைய உதவும்?
 • இத் திட்டம் ஒரு வருடத்திற்குள்ளோ அல்லது இரண்டு வருடத்திற்குள்ளோ செயல்படுத்த முடியக்கூடிய ஒன்றா?
 • எளிதாகவும், அதிக செலவில்லாமலும் இதை செயல்படுத்த இயலுமா?
 • எத்தனை காலத்திற்கு இத்திட்டம் பலனளிக்கும் ?

 

சிறந்த திட்டங்களுக்கான யோசனைகளை மேல் கூறிய அடிப்படையில் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.

சும்மா சும்மா ஐடியாக்களை விட்டெறியும் பலர் நம்மிடத்திலும் இருக்கின்றார்கள். பிறகென்ன தூள்கிளப்ப வேண்டியதுதானே!!!

குசும்பாக சில ஐடியாக்கள்!!!

தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
தயிர் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் – 8
தக்காளி – 1
மல்லி இலை – 1 கைப்பிடி
புதினா – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 4
அரைக்க
======
தேங்காய் துருவல் – 3/4 கப்
முந்திரி ஊறவைத்தது – 15
கசகசா – 2 ஸ்பூன்(தேவையில்லையென்றால் விட்டுவிடலாம்)
தாளிக்க
=========
நெய் – 2 ஸ்பூன்
எண்ணை – 2 ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
ஏலம் – 4
கிராம்பு – 3
 
செய்முறை

 • சிக்கனை தயிரில் இட்டு உப்பு சேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
 • பின் நெய்யை காயவைத்து அதில் பட்டை,கிராம்பு,ஏலம் சேர்த்து தாளித்து  வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் நல்ல ப்ரவுன் நிறம் வந்ததும் தக்காளி மல்லி இலை,புதினா சேர்த்து மேலும் வதக்கவும்.
 • தக்காளி நன்கு உடைந்ததும் ஊறவைத்த சிக்கனை தயிரோடு சேர்த்து இதனுடன் இட்டு கிளறி மிதமான தீயில் வேக விடவும்…30 நிமிடத்தில் சிக்கன் வெந்து விடும்..அவசரமாக இருந்தால் குக்கரில் 3 விசில் விடவும்.
 • அதே சமயம் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நல்ல மைய் போல் அரைக்கவும்.
  சிக்கன் வெந்ததும் அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 கொதி வந்ததும் தீயை அனைத்து விட்டு பரிமாறவும்
   

குறிப்பு:
நெய்ச் சோறு,தேங்காய் சாதம்,பரோட்டா,இடியப்பம்,புட்டு முதலியவற்றிற்கு சூப்பராக இருக்கும்

நீங்கள் ஏமாற தயார் என்றால் உங்களை ஏமாற்ற ஆயிரம் பேர் இரண்டாயிரம் வழிகளில் வருவதற்கு தயாராக இருக்கின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த‌ அஸ்லாம் பாவா என்பவர் – பல்லாயிரம் மக்களை பலவருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார். வயிற்றிலிருந்து கட்டி எடுத்தல், சிறுநீரகத்திலிருந்து கல் எடுத்தல், தலையில் இருந்து கட்டி அகற்றுதல்… போன்ற வைத்திய வல்லுனர்களால் செய்யக்கூடிய கடினமான அறுவை சிகிச்சைகளை சர்வசாதாரணமாக வெட்ட வெளியில் செய்கின்றார்!

இவரோடு கூட இருந்து பிரிந்த‌ ஒருவரின் அதிர்ச்சியான தகவல்களினால் உலகிற்கு தெரிய வந்தது. இவர் எவ்வாறு இந்த எமாற்று வித்தைகளை நிகழ்த்தி வந்தார் என்பதை இந்த வீடியோ படத்தின் மூலம் பாருங்கள்.. இறுதிவரை பொறுமையாக பாருங்கள்!!!

தேவையான பொருட்கள்

 • சிக்கன் – 1/2 கிலோ
 • பெரிய வெங்காயம் – 1 / 2
 • தக்காளி – 1 / 2
 • பூண்டு – 8 பல்
 • இஞ்சி – 2 அங்குலம்
 • புதினா தழை – ஒரு கை நிறைய
 • மல்லித்தழை – ஒரு கை நிறைய
 • சோம்பு – 1 / 2 டீஸ்பூன்
 • பட்டை – 1
 • கிராம்பு – 2
 • பச்சை மிளகாய் – 8 அல்லது 9 (தேவைக்கேற்ப)
 • சின்ன வெங்காயம் – 7 அல்லது 8
 • பிரியாணி அரிசி – 3 கால் படி
 • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

செய்முறை

 • பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
 • பூண்டு, இஞ்சி, புதினா தழை, மல்லித்தழை, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 • குக்கரில் தேவையான அளவு ஆயில் ஊற்றி 1 பட்டை சேர்க்கவும். இதில் நறுக்கிய பெரிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் 2, சேர்த்து வதக்கவும். பின்னர் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
 • இதில் அரைத்த விழுதை சேர்த்து 6 அல்லது 7 நிமிடங்கள் வதக்கவும். இதில் மூன்று சொம்பு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
 • எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீர் கொதிக்கும் பொழுது அரிசியைப் போட்டு குக்கரை மூடி வைக்கவும். வழக்கம் போல் மூன்று அல்லது நான்கு விசில் வந்ததும் இறக்கி விடவும். ஸ்டீம் போனவுடன் குக்கரைத் திறந்து கிளறி விடவும்.

வழங்கியவர்

hemalatha raju

பல இடங்களில் இப்பவும் காணக்கூடியதாக இருக்கும் இந்த காப்பி கப்கள். மக்கள் குடித்துவிட்டு கண்ட கண்ட இடங்களில் கப்களை விளாசியடிப்பதை.

குடிமக்களே! உங்கள் போன்றோர்களால் மெத்தமாக எல்லாருக்குமே ஆப்பு வைக்க வேலை நடக்குது தொரியுமா உங்களுக்கு?

2010ம் ஆண்டில் இந்த paper coffee cups, fast-food containers and plastic bags போன்ற எல்லவற்றையும் recycling system செய்யும் மக்களின் வரிப்பணத்தை மிச்சப்படுத்தும் முகமாக என கூறிக்கொண்டு இவற்றை தடைசெய்வதுக்கு யோசித்து வருகின்றது City of Toronto !

இதில் பெரிய நடைமுறைச் சிக்கல் என்னவென்றால், coffee வாங்குவது பற்றியது.

வேலைக்குப்போகும் போதும், கடை தெருவுக்குப் போகும் போதும், நண்பர் – உறவினர்களுடன் போகும் போதும் இந்த coffee இல்லாமல் இங்கு மக்கள் போகவே மாட்டார்கள்.

என் வேலை இடத்தில் கூட Break Timeகளில் மொத்தமாக அனைவதுக்கும் பல வேளைகளில் யாராவது coffee வாங்கித்தந்து மகிழ்விப்பார்கள்!

இனி இப்படி செய்வதற்கு தினமும் காப்பிக்கப்பை கொண்டுதான் போகவேண்டும்.

போகும் போது வழியில் யாரையாவது காரில் கூட்டிச்செல்லும்போது அவருக்கும் சேர்த்து காப்பி கப் ஏற்கனவே நாம் வைத்திருக்க வேண்டுமா? அல்லது இனி மறக்காமல் ஒவ்வொருவரும் உடை உடுத்தும் போதும் கூடவே காப்பி கப்பையும் இடுப்பிலே சொருக வேண்டுமா?

வாடிக்கையாளர்கள் இப்பவே கூறத்தொடங்கி விட்டார்கள் இவ்வாறு “consumers could be given a discount if they have their own mugs when they buy coffee”

ஏற்கனவே சில நிறுவனங்கள் Starbucks உட்பட தமது காப்பிக் கப் கொண்டுவரும் வாடிக்கையாளருக்கு விலைக்குறைப்பு செய்துள்ளன.

Torontonian Nancy Demattio says she is willing to pay a tax on coffee cups to get her fix, but the city should be making it easier to recycle.

சும்மா கிடைக்கின்றது காப்பிக்கப் என்றவுடன் சுளட்டி வீசிய நீங்கள் எல்லம் இனி சுமந்துகொண்டு திரிய வேண்டியதுதான்!

அடுத்த பக்கம் »