செவ்வாய், செப்ரெம்பர் 16th, 2008


பல இடங்களில் இப்பவும் காணக்கூடியதாக இருக்கும் இந்த காப்பி கப்கள். மக்கள் குடித்துவிட்டு கண்ட கண்ட இடங்களில் கப்களை விளாசியடிப்பதை.

குடிமக்களே! உங்கள் போன்றோர்களால் மெத்தமாக எல்லாருக்குமே ஆப்பு வைக்க வேலை நடக்குது தொரியுமா உங்களுக்கு?

2010ம் ஆண்டில் இந்த paper coffee cups, fast-food containers and plastic bags போன்ற எல்லவற்றையும் recycling system செய்யும் மக்களின் வரிப்பணத்தை மிச்சப்படுத்தும் முகமாக என கூறிக்கொண்டு இவற்றை தடைசெய்வதுக்கு யோசித்து வருகின்றது City of Toronto !

இதில் பெரிய நடைமுறைச் சிக்கல் என்னவென்றால், coffee வாங்குவது பற்றியது.

வேலைக்குப்போகும் போதும், கடை தெருவுக்குப் போகும் போதும், நண்பர் – உறவினர்களுடன் போகும் போதும் இந்த coffee இல்லாமல் இங்கு மக்கள் போகவே மாட்டார்கள்.

என் வேலை இடத்தில் கூட Break Timeகளில் மொத்தமாக அனைவதுக்கும் பல வேளைகளில் யாராவது coffee வாங்கித்தந்து மகிழ்விப்பார்கள்!

இனி இப்படி செய்வதற்கு தினமும் காப்பிக்கப்பை கொண்டுதான் போகவேண்டும்.

போகும் போது வழியில் யாரையாவது காரில் கூட்டிச்செல்லும்போது அவருக்கும் சேர்த்து காப்பி கப் ஏற்கனவே நாம் வைத்திருக்க வேண்டுமா? அல்லது இனி மறக்காமல் ஒவ்வொருவரும் உடை உடுத்தும் போதும் கூடவே காப்பி கப்பையும் இடுப்பிலே சொருக வேண்டுமா?

வாடிக்கையாளர்கள் இப்பவே கூறத்தொடங்கி விட்டார்கள் இவ்வாறு “consumers could be given a discount if they have their own mugs when they buy coffee”

ஏற்கனவே சில நிறுவனங்கள் Starbucks உட்பட தமது காப்பிக் கப் கொண்டுவரும் வாடிக்கையாளருக்கு விலைக்குறைப்பு செய்துள்ளன.

Torontonian Nancy Demattio says she is willing to pay a tax on coffee cups to get her fix, but the city should be making it easier to recycle.

சும்மா கிடைக்கின்றது காப்பிக்கப் என்றவுடன் சுளட்டி வீசிய நீங்கள் எல்லம் இனி சுமந்துகொண்டு திரிய வேண்டியதுதான்!

(ஜேர்மனியின் உள்ள ஒரு நேயரின் வேண்டுகோலுக்கிணங்க சில காலங்களுக்கு முன்னர் இட்ட பதிவு) மறு பதிப்பு என்று சொல்லலாமா?

தெய்வங்களை அருகில் வைத்துவிட்டு – மாலைபோட்டு, விளக்கேற்றி, பழம் – பாக்கு – வெற்றிலை எல்லாம் வைத்து பூஜை செய்துவிட்டு… அதே தெய்வத்திற்கு முன்னால் இப்படி கால்மேல் கால் போட்டுக்கொண்டு…

இதை எல்லாம் எப்படி தாங்குகின்றார்கள் தமிழ் மக்கள் – இந்து மக்கள்?????!!!!!

ஏதோ கற்புப்பற்றி கதைத்ததுக்கு அல்லோல கல்லோலப்பட்ட மக்கள் எல்லாம் எங்கு போய் ஒளிந்துகொண்டீர்கள்?

ஒரு இந்தியன் – ஒரு தமிழ் கலாச்சாரத்தின் மருமகள் – பல தமிழ் படங்களில் தெய்வபக்தியுள்ள, கலாச்சாரமுள்ள பல படங்களில் நடித்தவருக்கு தொரியாதா தெய்வங்களின் முன் எப்படி உட்காருவது என்று?

அதைவிட ஆச்சரியமான விடையம் – இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களோ, அங்கு வந்திருந்த எந்த சுயநினைவுள்ள ஜென்மங்களோ எவரும் இதைக்கண்டுகொள்ளவில்லை என்பதுதான்!!!!

 

 

மதுமிதா, திலகவதி IPS, நாயகி குஷ்பு! ( திலகவதி IPS ஐ கண்டதும் காலை சரிபணிவிட்டாவோ?)

அட சீ… அப்படிக்கூட நடக்கவில்லையே….!

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபலங்கள் எழுத்தாளர் வாஸந்தி, Dr.கமலா ஜெயராஜ், சாயாசிங்….