கூகுள் நிறுவனம் – சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் தனது பத்தாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மிக உன்னதமான சேவை ஒன்றை செய்ய முனைந்துள்ளது.

மக்களின் வேலைவாய்ப்பு, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாதுகாப்பு, வாழ்வியல்… இது போன்ற எந்த துறையிலும் பயன்படக்கூடிய நல்ல ஐடியாவை உங்களிடம் இருந்தே பெற்று அதனை செயல்ப்படுத்தவும் உள்ளனர்.

நாலுபேருக்கு உபயோகமாயிருக்கும் எதாவது ஒரு ஐடியாவை நீங்கள் Google வலைத்தளத்தில் பதிந்து, அதில் உங்கள் ஐடியா நடுவர்களாள் தெரிவு செய்யப்பட்டால்,  10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி அந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளார்கள்.

அடுத்தமாதம் 20 தேதி வரை(October 20, 2008) நமது யோசனைகளை இந்த இணையத்தில் பதிவு செய்யலாம்.

http://www.project10tothe100.com/

நீங்கள் எத்தனை திட்டங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். அனுப்பப்பட்ட திட்டங்களில் சிறந்த 100 திட்டங்கள் 2009 ஜனவரி மாதம் 27 தேதி அறிவிக்கப்படும். அந்த 100 திட்டங்களில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சிறந்த 20 திட்டங்களை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்தெடுக்க உள்ளார்கள்.

அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 20 சிறந்த திட்ட யோசனைகளில் இருந்து 5 திட்டங்களை நடுவர் குழு தேர்தெடுத்து நிறைவேற்ற உள்ளனர்.

  • இது எவ்வளவு மக்களுக்கு பலனளிக்கும் ?
  • இத்திட்டம் அத்தியாவசியமான ஒன்றா? இது எந்த அளவு மக்கள் பிரச்சனைகளை களைய உதவும்?
  • இத் திட்டம் ஒரு வருடத்திற்குள்ளோ அல்லது இரண்டு வருடத்திற்குள்ளோ செயல்படுத்த முடியக்கூடிய ஒன்றா?
  • எளிதாகவும், அதிக செலவில்லாமலும் இதை செயல்படுத்த இயலுமா?
  • எத்தனை காலத்திற்கு இத்திட்டம் பலனளிக்கும் ?

 

சிறந்த திட்டங்களுக்கான யோசனைகளை மேல் கூறிய அடிப்படையில் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.

சும்மா சும்மா ஐடியாக்களை விட்டெறியும் பலர் நம்மிடத்திலும் இருக்கின்றார்கள். பிறகென்ன தூள்கிளப்ப வேண்டியதுதானே!!!

குசும்பாக சில ஐடியாக்கள்!!!