செப்ரெம்பர் 2008


(ஜேர்மனியின் உள்ள ஒரு நேயரின் வேண்டுகோலுக்கிணங்க சில காலங்களுக்கு முன்னர் இட்ட பதிவு) மறு பதிப்பு என்று சொல்லலாமா?

தெய்வங்களை அருகில் வைத்துவிட்டு – மாலைபோட்டு, விளக்கேற்றி, பழம் – பாக்கு – வெற்றிலை எல்லாம் வைத்து பூஜை செய்துவிட்டு… அதே தெய்வத்திற்கு முன்னால் இப்படி கால்மேல் கால் போட்டுக்கொண்டு…

இதை எல்லாம் எப்படி தாங்குகின்றார்கள் தமிழ் மக்கள் – இந்து மக்கள்?????!!!!!

ஏதோ கற்புப்பற்றி கதைத்ததுக்கு அல்லோல கல்லோலப்பட்ட மக்கள் எல்லாம் எங்கு போய் ஒளிந்துகொண்டீர்கள்?

ஒரு இந்தியன் – ஒரு தமிழ் கலாச்சாரத்தின் மருமகள் – பல தமிழ் படங்களில் தெய்வபக்தியுள்ள, கலாச்சாரமுள்ள பல படங்களில் நடித்தவருக்கு தொரியாதா தெய்வங்களின் முன் எப்படி உட்காருவது என்று?

அதைவிட ஆச்சரியமான விடையம் – இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களோ, அங்கு வந்திருந்த எந்த சுயநினைவுள்ள ஜென்மங்களோ எவரும் இதைக்கண்டுகொள்ளவில்லை என்பதுதான்!!!!

 

 

மதுமிதா, திலகவதி IPS, நாயகி குஷ்பு! ( திலகவதி IPS ஐ கண்டதும் காலை சரிபணிவிட்டாவோ?)

அட சீ… அப்படிக்கூட நடக்கவில்லையே….!

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபலங்கள் எழுத்தாளர் வாஸந்தி, Dr.கமலா ஜெயராஜ், சாயாசிங்….

நாயிற்கு எங்கு அடித்தாலும் நொண்டிக்கொண்டுதான் திரியும்!

இங்கு நாய் என்பது கனடிய காஸ் கம்பனிகளுக்கும், அடித்தல் என்பதை சூறாவளிக்கும்,  காலை நொண்டுவதை காஸ் விலையேற்றத்தையும் குறிப்பிட்டுள்ளேன்

ஏன் என்று கேட்கின்றீர்களா?
அமரிக்காவில் எங்கோ அடிக்கும் சூறாவளிக்கும் – கனடிய பெற்றோலியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கனடா அமெரிக்காவிடம் இருந்து பெற்றோலை வாங்குவதும் இல்லை.சொல்லப்போனால் அமரிக்காதான் கனடாவிடம் பெற்றோலை பெறுகின்றது.அப்போ ஏன் இந்த விலையேற்றம்?

அதுதான் முதலாளித்துவம்!

ஏதாவது ஒரு சாட்டைவைத்து மக்களிடம் எப்படிஎல்லாம் பணத்தை கறக்கமுடியுமோ அப்படியெல்லாம் கறத்துவிடுவார்கள் இந்த பெரிசுகள்!அப்போ கனடாவில் அரசியல் தலைவர்கள் – ஆட்சியாளர்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்களா? 

 

இது சம்பந்தமாக முடிவெடுக்கும் அதிகாரத்தில் எத்தனை அதிகாரிகள், அரசியல் வாதிகள் இருக்கின்றனர்? இவர்களை சமாளிப்பது தொரியாதா என்ன இந்த பெற்றோலியக் கம்பனிகளுக்கு?!
என்ன நடக்கின்றது என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்! 

ஒரு சிறு சுவாரிசியமான சம்பவம்!

 

எங்கள் ஊரில் கந்தன் என்று ஒருவர். இவர் முட்டையையும், முருங்ககாயையும் வியாபாரம் செய்து வந்தார்.

 

 

இவர் வீட்டில் 5 கோழிகள் இருந்தது. இந்த 5 கோழிகளும் பக்கத்துவீடு, முன்வீடு, பின்வீடு என மேய்ந்துவிட்டு முட்டை போடமட்டும் இவர் வீட்டுக்குப்போய்விடும்.

அடுத்தது முருங்கைமரம் – பக்கத்து வீட்டுக்கும் இவர் வீட்டுக்கும் இடையில் வேலியோரம் இருந்த முருங்கை மரத்தை தனது மரம் என அடாவடித்தனம் பண்ணி தனதாக்கிக்கொண்ட மரம். பக்கத்து வீட்டுக்காரரின் கிணத்தடியிற்கு அருகில் இந்தமரம் இருந்ததினால் வருடம் பூராவும் காய்த்துக்குலுங்கும்.

இவற்றை எடுத்து தனது வீட்டுக்கு முன்னால் சிறு தட்டிக்கடை வைத்து சிறு காசும் கண்டார்.

சிறிது நாட்களில் முட்டை வியாபாரத்தைப் பெருக்க எண்ணி மொத்த வியாபாரிகளிடம் வாங்கி விற்று லாபமும் கண்டதுடன் தனது கடையையும் விஸ்த்தரிப்புச்செய்தார்.

இன்னும் சிறிது நாட்கள் களித்து, தானே கோழிப்பண்ணையை உருவாக்கி – தனது கடைக்கும் தனது ஊரில் உள்ள அனைத்துக்கடைகளுக்கும், பக்கத்து ஊர்கடைகளுக்கும் சப்பிளை பண்ணத்தொடங்கி அதில் நல்ல லாபமும் கண்டார்.

என்றாலும் கந்தனுக்கு ஆசை குறையவில்லை. மெதுமெதுவாக முட்டையின் விலையை 10 சதத்தினால் அதிகரித்தார். மக்களும் தமக்குள் முணுமுணுத்துக்கொண்டு தொடர்ந்து முட்டையை வாங்கிவந்தனர்.

இந்த வேளை கிறிஸ்மஸ் பண்டிகையும் வந்தது. கந்தன் இதே சாட்டாக 25சதம் மேலும் அதிகரித்துவிட்டார்! கேட்டால் “கிறிஸ்மஸ் பண்டிகைக்காக முட்டை டிமாண்டாக இருக்கு..” என்று பதில் வந்தது. இவ்வளவிற்கும் இந்த ஊர்களில் கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்கள் யாரும் இல்லை!

கந்தனின் இந்த போக்கை அவதானித்த இளைஞர் கூட்டம் ஒன்று கூடி, எல்லா வீடுகளுக்கும் சொல்வது மாதிரி சொல்லி மக்களை ஒன்று திரட்டினர்.

மறுநாளே, முட்டையை டசின் கணக்கில் வாங்கியவர்கள் அனைவரும் 2 அல்லது 3 முட்டையையும், சிலர் வாங்காமலும் விட்டுவிட்டார்கள்.

இதனால் கடைகளில் முட்டைகள் தேங்கத்தொடங்கியது. கடைக்காரர்களும் கந்தனிடம் கொள்வனவு செய்வதை குறைத்துக்கொண்டனர். கந்தனின் பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு என்ன தெரியும், அதுபாட்டுக்கு வஞ்சகம் இல்லாமல் முட்டைகளை இட்டுத்தள்ளியது. இப்போ கந்தனிடம் ஆயிரக்கணக்கில் முட்டைகள் தேங்கிவிட்டது.

ஆனால் விலையை குறைக்க மனமின்றி, தேங்கிய முட்டைகளை கிண்டித் தாட்டார். இப்படி சிலநாட்கள் போனபின் பார்த்தார் – முதலுக்கே மோசம் வந்துவிடும் பொல்தோன்றியது.

தனது விறுமாப்பையும், பேராசையையும் விட்டுவிட்டு பழையபடி முட்டையின் விலையை பழைய குறைந்தவில்லைக்கே கொண்டுவந்தார்.

இப்போ மீண்டும் விஷயத்துக்கு வருவோம்,

இந்த கந்தனிடம் பிரயோகித்த தாரக மந்திரத்தை நாம் பெட்ரோல் உபயோகத்திலும் கடைப் பிடிக்கவேண்டும்.

  • நம் கார்களுக்கோ,இருசக்கர வாகனங்களுக்கோ பெட்ரோல்/டீசல்களை  நிரப்பும் போது முழுவதும் நிரப்பாமல் பாதி அளவே நிரப்பவேண்டும்.
  • வாகனங்களின் உபயோகத்தையும் குறைக்கவேண்டும்.
  • வேலைக்கு போகும்போது சுளர்ச்சிமுறையில் உங்கள் சக வேலைக்காரைகளையும் அழைத்துச்செல்லுங்கள்.
  • Shopping என்று அடிக்கடி செல்லாமல் பட்டியலிட்டு ஒரேதரத்தில் வாங்கிவிடவேண்டும்.
  • தேவையில்லாமல் ஊர் சுற்றுவதை நிறுத்தவேண்டு.
  • முடியுமானவரை பஸ்ஸை உபயோகியுங்கள்.

இப்படி செய்தால் பெட்ரோல் நிலையங்களில் பூமியின் அடியில் புதைக்கபாட்டுள்ள பெரிய டாங்குகள் காலியாகாத சூழ்நிலை உருவாகும்.

பெட்ரோல் சேமிப்பு கிடங்குகளில் இடப் பற்றாக் குறை ஏற்படும்.

பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் கச்சா எண்ணேய் இருப்பு அதிகமாகிக் கொண்டெ போகும்
கச்சாஎண்ணெய் டாங்கர் கப்பல்களின் நெருக்கத்தால் துறை முகங்கள் திக்கு முக்காடும்.

விளைவு கந்தனின் கதைதான்!

பெரிசுகளை வழிக்குக்கொண்டுவர நீங்கள் ரெடியா?

 

 

 

 

 

எனது ஐந்தாம் வகுப்பு, வகுப்பு ஆசிரியையும், புலமைப்பரிசு பரிட்சையில் (Scholarship) சித்தியடைய தனது நேரத்தை எல்லாம் எனக்காக செலவுசெய்து என்னையும்  சக  மாணவர்களையும்  அறிவுறச்செய்த குருவும் ஆகிய திருமதி யோகாம்பிகை விஸ்வலிங்கம் டீச்சரின்  ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்.

“எக்காலத்திலும் குருவருள் கிடைத்தால் தான் திருவருள் கிட்டும் என புரியவைத்து எமக்கு பாடம் சொல்லித்தந்ததெல்லாம் இன்னமும் எம் மனம் முன்னே கலர் கூட மாறாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றது டீச்சர்…”

இவரின் பிரிகையினால் அல்லலுறும் அவரது குடும்பத்தினருக்கு எனதும், என் சக வகுப்பு மாணவர்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

வல்வை சிவகுரு வித்தியாசாலையின் இளைப்பாரிய ஆசிரியை திருமதி யோகாம்பிகை விஸ்வலிங்கம் இன்று (12- 09- 2008) கொழும்பில் காலமானார்.

இவர் காலஞ்சென்ற வைத்திலிங்கம் பர்வதம் தம்பதிகளின் அன்பு புதல்வியும் காலஞ்சென்ற ஐயாத்துரை விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் நளினா சுகுனா வேணி விக்னேஷ் வீணா அன்பழகன் எழில் நங்கை ஜீவானந்தம் ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ்சென்ற வரதராசா  நீதிராசா விஜயராஜா தங்கராஜா பாலேந்திரன் பகீரதி வளர்மதி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நாளை சனிக்கிழமை பி.ப 4 மணியளவில் கொழும்பு மாதம்பிட்டி மயானத்தில் நடைபெறும் என அறியத்தருகிறோம்.

தொடர்புகளுக்கு வீணா தங்கராஜா

001 416-661-4642

 

பிக்பேர்ன் (பெருவெடிப்புச் சோதனை)

மனித குலத்தின் நிலைப்பாட்டுக்கே பங்கம் ஏற்படுத்தக் கூடும் என் கருதப்படும் ஒரு ஆய்வு

ஸ்விட்சர்லாந்து பிரான்ஸ் எல்லைப்புறத்தின் அடியில், அணு உடைக்கும் கருவி ஒன்றைச்சுற்றி இரு திசைகளிலும், அணுக் கருத்துகள்களைக் கொண்ட கதிர்க்கற்றைகளை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவியிருக்கிறார்கள்.

பிரபஞ்சம் உருவான விதம் குறித்து மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளும் முயற்சி தொடங்குவதைக் குறிக்கும் ஒன்றாக இந்த பரிசோதனை அமைகிறது.

இந்த கற்றைகள் சில நேரம் சுழற்றிவிடப்பட்டு பின்னர் மோத வைக்கப்படும்போது, சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகும்.

இதன் மூலம், அணுக் கருத்துகள்கள் உருவாகும் என்றும், அதன் மூலம் பிரபஞ்சம் எப்படி ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புதிய அறிவைப் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் (பௌதீகவியலாளர்கள்) நம்புகிறார்கள்.

இந்த அணுத்துகள்களின் மோதல்கள் சூரியன் உட்பட அனைத்தையும், அனைத்து சக்திகளையும் அகத்துறிஞ்சிக்கொள்ளும் வல்லமை கொண்ட ஒரு கரும் சூனிய வலயத்தை உருவாக்கக்கூடும் என்றும் அதனால் உலகம் அழியக்கூடும் என்றும் சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.

 உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பிக்பேர்ன் ஆய்வுப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வரலாறு காணாத வகையில் குறித்த ஆய்வு தொடர்பில் மாறுபட்ட விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

உயிரினங்கள் உருவாக்கப்பட்ட விதம் குறித்து ஆராய்வதற்காக நீண்ட சுரங்கமொன்றில் செயற்கையான பிரலயமொன்றை ஏற்படுத்தி அதன் மூலம் ஆய்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்த ஆய்வுகள் இடம்பெறுகின்றமையினால் சுவிஸ் மக்கள் மற்றும் ஊடகங்கள் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றன.

சுமார் 27 கிலோ மீற்றர் நீளமுடைய சுரங்கமொன்றில் அணுசக்தியைப் பயன்படுத்தி பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி அதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்படவுள்ளன.

எனினும் இந்த ஆய்வுப் பணிகள் மனித குலத்தின் நிலைப்பாட்டுக்கே பங்கம் ஏற்படுத்தக் கூடும் என ஒரு சில ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எது எவ்வாறாயினும் பாரிய பொருட்செலவில் ஜெனீவா நகரில அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தில் குறித்த ஆய்வுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பொறுத்திருந்துதான் பார்போம்….இருந்தால்!!!

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரகாந்தி அம்மாள் சண்முகசுந்தரம் அவர்கள் 12.09.2008 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

மலர்வு 02.02.1939                                                             உதிர்வு 12.09.2008

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாமுத்து, கமலநாயகி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், Dr. சண்முகசுந்தரத்தின் அன்பு மனைவியும், சாந்தினி(கனடா), பிரபாகரன்(கனடா), ஜெயந்தினி(டுபாய்), கந்தாஸ்கரன்(ஐக்கிய ராச்சியம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னார், சிவராமன், மலர்விழி, நந்தகுமார், கமலாவதி ஆகியோரின் அருமை மாமியாரும், திவ்யா, நிரூபா, கிருஷா, ஐசிக்கா, சசிக்குமரன், ராகுலன், பிறேமானந்தன், செல்வானந்தன், அருணன், சிவானி ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் கொழும்பு கனத்தை மயானத்தில் 13.09.2008 சனிக்கிழமை அன்று நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
 
 
தகவல் – கணவர், பிள்ளைகள் 

மேலதிக தொடர்புகளுக்கு
 
Dr. சண்முகசுந்தரம்  -இலங்கை 0094 777148669
சாந்தினி – கனடா 001 9056244301
பிரபாகரன் – கனடா 001 4166953249
ஜெயந்தினி  – டுபாய் 0097 143352784
கந்தாஸ்கரன் – லண்டன் 0044 2087659955

வீரகேசரி நாளிதழில் வந்த அறிவித்தல்.

விண்ணில் இருந்து விளும் கற்களினால் பூமி அழிவதை முன்பு பார்த்தோம்.

(பார்க்காதவர்கள் ஒருதரம் இங்கு பார்க்கவும் உலகம் எவ்வாறு அழியும்?   உலகம் அழியும் நாள்!

இதே விடயத்தை ஒத்த ஒரு ஆங்கிலத்திரைப்படம் Armageddon “ஆர்மகெடன்”- தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் ஞாயிறு இரவு 7மணிக்கு சன் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகின்றது.

ஒரு நல்ல அறிவுக்கு விருந்தான படம்.

சிறியோர் முதற்கொண்டு பெரியோர் வரை பார்க்கவேண்டிய படம்.

காணத்தவறாதீர்கள்!!!

இதோ அந்தப்படத்தின் ஆங்கில Trailer காட்சி

Desalination Plant

பொங்கல் பண்டிகை முதல் சென்னை மாநகருக்கு குடிநீராக்கப்பட்ட கடல் நீர் வினியோகிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தால் சென்னை நகருக்கு கூடுதலாக 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னை மக்களின் தாகம் வெகுவாக தணிந்தது.

சென்னை நகர மக்களுக்கு தற்போது தினமும் 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் 98.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் தான் சப்ளை செய்யப்படுகிறது. மக்கள் தொகை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் குடி தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகள் தொழில்மயமாகி வருவதால் 2030ம் ஆண்டில் சுமார் 1,000 மில்லியன் லிட்டர் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர்க்க வட சென்னையில் மீஞ்சூருக்கு அருகில் காட்டுப் பள்ளி கிராமத்தில் ரூ. 510 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு மத்திய அரசு 80 சதவீதமும் மாநில அரசு 10 சதவீதமும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 10 சதவீதமும் நிதி வழங்கின.

60 ஏக்கர் நில பரப்பளவில் இந்த திட்டம் உருவாகி வருகிறது.

சென்னையில் இருந்து வடக்கே 35 கிமீ தொலைவில் கட்டப்பட்டு வரும் இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளில் 75 சதவீதம் முடிந்து விட்டன. மீதமுள்ள 25 சதவீத பணிகள் திட்டமிடப்படி இன்னும் வாரங்களி்ல் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து பொங்கல் முதல் கடல் குடிநீர் சென்னைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நகர மக்களுக்கு பொங்கல் பரிசாக இந்த புதிய குடிநீர் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு்ள்ளது.

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »