தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு பற்றிய செய்திகள் அண்மைக்காலங்களில் எல்லா மீடியாக்களிலும்.

விவசாயிகள் நீர் இறைக்கமுடியாததால் பயிர்கள் நாசம், உணவுகள் பதப்படுத்தமுடியாமல் நாசம், கர்ப்பிணிப்பெண்களுக்கு பிரசவம் பார்க்கமுடியாமல் அவலம் இப்படி ஆளாளுக்கு அடிக்கிக்கொண்டே போகின்றனர்.

ஏன் இந்த மின்சாரப் பற்றாக்குறை?

இயற்கை வளங்கள் மிகவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டேவரும் காரணங்களினால் அதை நம்பி உருவாகியுள்ள மின் நிலையங்களின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பெரும்பகுதி நிலக்கரியை கொண்டே மின்னுற்பத்தி பெறப்படுகின்றது.

இந்தியாவில் கிடைக்கும நிலக்கரி, மின் உற்பத்தி செய்வதற்கான தரமில்லாத காரணத்தினால், பெருமளவு நிலக்கரியை வெளி நாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்து கொள்ள வேண்டும்.

மற்றபடி பெட்ரோல், டீசல் கொண்டு மின் உற்பத்தி செய்வதைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்தியாவின் எண்ணை வளம் பத்தாதநிலையில் அதன் தட்டுப்பாடும், விலையுயர்வும் சொல்லத்தோவையில்லை. (நான் முன்பு கப்பலில் கடமையாற்றிய காலகட்டத்தில் பொற்றோலிய பொருட்டளை குஜராத், மும்பை, பூனா, நியூமங்கலூர், கல்கத்தா ஆகிய இடங்களுக்கு பலதடவை கொண்டுசென்றுள்ளோம்.)

காற்றாலைகளின் மூலமாக சில இடங்களிலே இயற்கை‌ உடன்பட்டாத்தான் மிகவும் சொற்ப அளவில் மின் உற்பத்தி செய்யமுடியும்.

நதிநீரை தேக்கிவைத்து நீர்மின்னிலயங்கள் ஏப்படுத்துவது பற்றி சொல்லத்தேவையே இல்லை. இந்தியர்களுக்குள்ளேயே தண்ணீர் தரமாட்டேன் என்று ஒரு சகோதர நிலைப்பாடு அரசியல். குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத வேளை பெரும்பாலும்.

அணு மின் உற்பத்தி இவற்றுக்கெல்லாம் விடை கொடுக்கும் என்றால், இதனை ஆதரிப்பவர்களும், பாதுகாப்பு, பங்கம், சுழல் மாசு என எதிர்ப்பவர்களும் போடும் சண்டைகளாலும், முட்டுக்கட்டைகளாலும் அந்தத்திட்டம் அமுங்கியே போய்க்கிடக்கின்றது.

அப்போ என்னதான் வழி?

இதோ இருக்கின்றது !

எந்தவிதமான சூழல் மாசுபடுதலும் இன்றி, எந்தவிதமான பாதுகாப்பு பிரச்சனையும் இன்றி, பெற்றோலியப் பொருட்களே இன்றி ஒரு வழி இருக்கின்றது!!

 

வருடத்தில் 300 நாட்களும் சூரிய ஒளி வெளுத்து வாங்கும் தமிழ் நாட்டில் அந்த சூரிய ஒளியை கொண்டே மின் உற்பத்தி செய்யும் திட்டம் தான் அது.

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி தயாரிக்கும் விசயத்தில் எவ்வளவோ உயர் தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் இங்கு அதைப்பற்றி யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

ஒவ்வொரு மாவட்டத்திற்கு மாவட்டம் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவி மின் உற்பத்தியில் தாராளமாக தன்னிறைவு காண்லாம்.

ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் செலவு ஆனாலும் தொலைநோக்கு பார்வையில் இதனை அமுல்ப்படுத்தினால் பின்னர் மிகவும் குறைந்த விலைக்கே மின்சாரத்தை பெறமுடியும். 

இலவசமான சூரிய ஒளி தான் இதன் முதலீடு ! பராமரிப்பு செலவும் மிகவும் குறைவானது.

இந்த சொற்ப மின்கட்டனத்தை ஆட்சிசெய்யும் கட்சியே ஏற்றுக்கொள்ளும். அல்லது எதிர்க்கட்சி இலவசமாக தருவதாக வாக்குறுதி தரும். அட இலவச கலர் TV, இலவச வேட்டி, இலவச சேலை, இலவச குடம்… இப்படி அடிக்கிக்கொண்டே போகும் அரசியல் வாதிகள் இந்த சொற்ப மின்கட்டனத்தை பெரிது படுத்தாமால் இலவசமா நிச்சயம் தருவார்கள் பொதுஜனங்களே!!!

சூரியனை தெய்வமாக வணங்கும்  தமிழ் நாட்டில், அந்த ஆதவனின் அளப்பறியா சக்தியை முழுவதும் பயன் படுத்துங்கள்!

சிறுகுறிப்பு: சூரிய ஒளி இலவசமாகக் கிடைப்பதால், மற்றய மின்னிலையங்களில் எரிபொருட்டளை இறக்குமதி செய்வதில் கிடைக்கும் கமிஸன் இங்கு கிடைக்காது என்பதால் தயவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, அரசியல் வாதிகளோ இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடாமல் இருக்க வேண்டும்.