இன்று ஏடு துவக்குதல்!

ஒவ்வொரு மனிதனது கல்விக்கு முதலிடும் அடிக்கல்!

தம் குழந்தைகள் கல்வியில் சாதிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும், பேரர்களும் ஏன் பூட்டர்களும் கூட இனிய, உயர்ந்த நம்பிக்கை வைத்து ஆரம்பிக்க வைக்கும் ஆக்கபூர்வமான முயற்சிதான் இந்த ஏடு துவக்குதல்.

‘வித்தியாரம்பம்’ என்றும் இதனை சொல்வார்கள்.  இன்று கல்விக்கு அடிக்கல் நாட்டும் இளம் சிரார்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

கல்வி என்பது எமது அடிப்டை அறிவு, எமது தொழிலின் ஆழுமை, எமது செல்வத்தின் பெக்கிசம், எம்து வீரத்தின் விளைநிலம். கல்வியே அனைத்துக்கும் ஆதாரம்.

பலருக்கு,  சொந்தங்கள் என்று நான் கொண்டாடும் உறவுகளை விட கூடவே கல்வி கற்றவர்களுடனும், அவர்களின் உறவுகளுடனும் இன்னும் ஒரு இனிய உறவும் இந்தக்கல்வியினால் ஏற்படும்.

இன்று ஏடு துவக்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல் தொடர்ந்து சாதிக்கும் வரை உங்கள் குழந்தைகளுடன் துணையிருக்க வேண்டும் என்று இன்னாளில் பெரியவர்களாகிய உங்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.

“கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்னும் பழமொழி தெரியும் தானே!

வேலை, நேரம் இன்மை, வசதியின்மை போன்ற காரணங்களுக்காக உங்கள் செல்லக்குழந்தைகளை ஏடு துவக்க அழைத்துச் செல்லவில்லையா? கவலையை விடுங்கள், கீழே உள்ள படத்தை கிளிக் பண்ணி ஜாம் ஜாம் என்று தமிழில் ஏடுதுவக்குங்கள்!