இரண்டாயிரம் ஆண்டளவில் நான் இந்தியாவில் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு நண்பி பண்டிகை இனிப்புடன் எங்கள் வீட்டிற்கு வந்தாள்.  சும்மா சாத்தியிருந்த கதவை திறந்துகொண்டு உள்ளே வரவும் – இந்தப்பாடல் எங்கள் வீட்டு TVயில் ஓடவும் சரியாக இருந்தது.

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

உள்ளே வந்த அந்த நண்பி, “Hi, Is there Aunty?” என்றாள். அந்த நேரம் பார்த்து சரியாக பாட்டின் வரியும்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

என்று பாடவும், நானும் தாய் மொழி பேசு… என்றேன். நண்பியும் சூழ்நிலையை உணர்ந்து ரசித்து சிரித்துக்கொண்டு ” எந்தப்படத்தில் இந்தப்பாடல்? என்று கேட்டுக்கொண்டு பாட்டைப்பார்த்துக்கொண்டும் இருந்தாள். அப்போது அவள் கேட்ட ‘Aunty’ உம் வந்துவிட பண்டிகை பலகாரத்தத கொடுத்து, அளவளாவிக்கொண்டு TVயையும் என்னையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்துவிட்டு முகம் சிவக்க ‘வாரேங்க’ என்று கூறிச்சென்றாள்.

அதன் பின்பு அந்த நண்பி விட்டுக்கு வரும்போதெல்லாம், ‘என்ன இந்தப்பக்கம் காற்று வீசுகின்றது’ என்று கிண்டல் பண்ண, அவளும் வெட்கமாய் சிரித்துக்கொண்டு போவாள்.

காலம் வேகமாய் ஓட, எனக்கும் கனடாவிற்கு போக விசா வந்து புறப்படபட தயாராகும் போது அந்த நண்பி விபரம் கேள்விப்பட்டு வளியனுப்ப வந்தாள்.

“என்ன கனடா போகறீங்களாமே?” என்று சோகமா சந்தோஷமா என்று தெரியாதது போல் கேட்டள்.

நானும் அதற்கு “ம்….. காற்று இல்லாத இடத்திற்கு போகின்றேன்….” என்று கொஞ்சம் மனது கனக்கச் சொன்னேன். அதற்கு கண்கள் சிவக்க, கொஞ்சம் குளமாக்கி ஒரு சிரிப்பு சிரித்தாளே…. அந்த சிரிப்பிற்கு என்ன பரிமானம் என்று இன்றுவரை புரியாத புதிர்தான்!

அந்த இனிய பாடல் – காற்று வீசும் போதெல்லாம் இந்தப்பாட்டு என் மனதில் அடிக்கடி ஞாபகத்துக்கு வரும்.

இனிய எழிமையான வரிகள், சுகமான இசை, ஒரு உரையாடல் போலவே இருக்கும் இந்தப்பாடல் 2000ம் ஆண்டு வெளிவந்த ரிதம் படத்தில், கவிதா, உன்னிகிருஷ்னன் பாடி, ஏ.ஆர்.ஹ்மான் இசை அமைத்த பாடல்.

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக…