நவம்பர் 2008


kanavillai301830

இழந்தவர்களுக்குத்தான்  இழப்பின் ஆளம் புரியும்!

பிரிந்தவர்கள் இங்கு வரும் நேயர்கள் யார் மூலமாவது ஒன்று சேர்ந்தால் எவ்வளவு இனிமையாய் இருக்கும்.

தேடும் கண் பார்வை என்றொரு பதிவு முன்னர் இட்டிருந்தேன் பார்க்காதவர்கள் ஒருமுறை பார்த்து விட்டு வரவும்

இப்போ ஒரு சகோதரன் பிரிந்த தன் தம்பியை தேடுகின்றார்.

1988 இல் குவைத் சென்ற சுதா என அழைக்கப்படும் பார்க்கவன் சுதாகரன் என்பவர் 1996ம் ஆண்டிலிருந்து எந்தவித தொடர்பும் இல்லாமல் இருப்பதனால் தந்தை, தாய், சகோதரர்கள், மற்றும் சொந்தங்கள் யாவரும் மிகவும் வேதனையுடன் உள்ளார்கள்.

சுதா என்னும் சுதாகரன்

சுதா என்னும் சுதாகரன்

இவரைப் பற்றி விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது இவரைக் கண்டவர்கள் தயவுசெய்து எங்களுக்கு அறியத்தரவும் என மனவேதனையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

வேதனையுடன் வாழும்
சகோதரன்
பா. சுதர்சன்(பாபு)       Phone: +47 412 72062, +47 413 42161
நோர்வே                     e-mail: suthar_san@live.no

Toronto நேயர் K அவர்கள் இன்று இந்தியா போகின்றார்.

அவர் பயணத்தை, போகும் விமானத்தை அப்பப்ப கண்காணித்து அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்த பதிவு இடப்படுகின்றது.

சென்னை விமான நிலையத்தி இரவு 8.30மணிக்கு 23நிமிட தாமதத்துடன் சென்றடைந்தார். கனடிய நேரப்படி Dec 1, காலை 10.00மணி.

இன்று சென்னையில் மேகமூட்டத்துடன் 25°C வெப்பநிலை உணரப்படுகின்றது.

அவரது பயணம் இனிதே அமைந்திட வாழ்துகின்றேம்.

 Dubai to Chennai

ஜப்பானில் Nissan கார் தயாரிப்பாளர்கள் அதிசய கார் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இந்தக்காரின் Boddy பகுதி 360° திரும்பக்கூடியது. சக்கரங்கள் 90° திசை மறி திரும்பக்கூடியது. Parallel Parking க்கும் Reverse Parkingக்கும் மிக இலகுவான கார் இது. கூடவே ஓட்டுபவரின் முகத்தைப் பார்த்து ஆங்கிலத்திலும், ஜப்பான் மெழியிலும் கதைக்கக்கூடிய ஒரு ரோபோவும் உள்ளது.

எதிர்காலத்தில் உங்கள் முன் ஓடித்திரியப் போகின்றது இந்தக் கார்!

ஒரு Luxury  பயணிகள் கப்பலினுள் உணவகத்தில் நடப்பதைப் பாருங்கள். கடைசிவரை பாருங்கள்!

எவ்வளவு தான் ரகசியமாக ரஜனியும் சங்கரும் அவர்களது அடுத்த படத்தை எடுத்துக்கொண்டு இருந்தாலும், நம்ம ஆட்கள் இல்லாத உலகமா? இதோ பாருங்கள் ஒருவரின் செல் போன் கமெராவினால் ரகசியமாக எடுக்கப்பட்ட படங்களை!


“இங்கு பல்லைக்காட்டும் பொண்ணு மட்டும் கையில கிடைச்சா…” என்று சங்கர் பலலைக்கடிப்பது உங்களுக்கு கேட்கும் என நினைக்கின்றேன்!

கனடாவில் இப்போ காரை ஓட்டிக்கொண்டு ‘செல் போன்’ உபயோகிப்பது பாதுகாப்பு இல்லை என்று ஒவ்வொரு இடமாக தடை செய்யப்பட்டுக் கொண்டு வரும் வேளை, இதுவும் ஒரு சிந்திக்கத்தக்க விடயமாகவே இருக்கின்றது.

நேற்று காலை 911க்கு வந்த போன்னை அடுத்து Toronto பெரும்பாகத்தில் உள்ள Highway 7 ல் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர் பொலிசார். அங்கு ஒரு கார் வீதியோரத்தில் நின்றிருந்த விளக்குக் கம்பத்துடன் மோதி கவிழ்ந்த நிலையில் இருந்தது.

கிட்ட சென்ற பொலிசாசுக்கு ஒரு அதிர்ச்சி!

21 வயது பெண்மணி ஒருவர் காரினுள்….

தலை, முகம் முழுவதும் பாலினாலும், சீரியலினாலும் அபிசேகம் செய்தநிலையில்…

ஆமாம்! காரை ஓட்டிக்கொண்டு – காலை உணவு உட்கொட்டிருக்கின்றார் அம்மணி!

சும்மா வீட்டில் பாலும் சீரியலும் உண்ணும் போதே சிறிதேலும் சிந்தாமல் உண்ணுவது கொஞ்சம் கஸ்டம். இதில் காரை ஓட்டிக்கொண்டு…. அசாத்தியமான அம்மணிதான்!

நாம் எல்லோரும் பலதடவை பார்த்திருக்கின்றோம், வாகனம் ஓட்டுபவர்கள் – வாழைப்பழம் உண்ணுவதையும், சான்விச் சாப்பிடுவதையும், குளிர்பாணங்களை அடிவரை அண்ணாந்து குடிப்பதையும், டோ-நட் கடிப்பதையும், முள்ளுக்கறண்டியினால் உணவு உண்பதையும்….. ஏன் லிப்ஸ்டிக் பூசுவதையும், மேக்கப் பேடுவதையும் கூடத்தான்!

இவை எல்லாம் மக்கள் மட்டுமல்லாமல் பொலிசாரும் தான் செய்கின்றனர்!!!

இவற்றினால் வரும் பாதுகாப்பு குறைபாட்டுக்கு என்ன சட்டம் போடலாம்?

“எத்தனை ‘பெக்’ அடித்தாதாலும் நிதானமாக நடப்பேன்” என்று பெருமிதம் கொள்ளும் அண்ணாச்சி மார்கள் மத்தியில் – இப்படி ஒரு இளைஞன், தண்ணீரின் மேல் தாழாமல் நடப்பது என்பது அதைவிட ஆச்சரியமான விடையம் தான்!

அடுத்த பக்கம் »