இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்கெல்லாம் நாம் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்று அர்ஜுன்னும், அஜித்தும் பேசியதாக சில பத்திரிகைகளில் வந்த செய்திகளுக்கு பல அஜித் ரசிகர்கள் வதந்தி என்று மறுத்தனர்.

ஆனால அவை எல்லாம் உண்மைதான் என்று சொல்லாமல் சொல்லிய இவர் “சினிமா இன்டஸ்ட்ரியை, சினிமா இன்டஸ்ட்ரியாக இருக்க விடுங்கள்” என்று இலங்கைத்தமிழருக்காக நடைபெறும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு எதிர்ப்பை மேடையிலேயே காட்டி, ஒரு வாக்கியத்தில் முடித்துக் கொண்டார். 

இதன் பொருளை இனிமேலும் வேறுமாதிரி உங்கள் தலைக்குச் சார்பாக பேசமுடியாதபடி உங்கள் தலலக்கே ஒரு தூக்குக்கயிற்றை நீங்களே கொடுத்துவிட்டீர்களே தலை!!!

திரு அஜித் அவர்கள் இந்த பதிவை பார்ப்பாரோ தெரியாது. என்றாலும் அவரிடம் ஒரு கேள்வி:-

உங்களது ரசிகர் மன்றங்களை வைத்து ஏன் உங்கள் ரசிகர்களை உதவிசெய்யவும், ஆதரவுசெய்யவும் மனித மணித்தியாலங்களை வீணடிக்கின்றீர்கள். கோயிலுக்கே போகத எத்தனை ரசிகர்கள் கட்டவுட்டுக்கு கற்பூரம் காட்டும் போதும், தன்குழந்தைக்கு பால் இல்லாமல் இருக்க, உம்போன்றோருக்கு பால் அபிசேகம் செய்த போதும், படம் வெற்றிபெறவேண்டும் என்று படப்பெட்டியை யானைமீது எடுத்துச்சென்று – பூஜை பண்ணிய போதும் , பெண்கள் எல்லாலும் தீச்சட்டி தூக்கி வேண்டிய போதும்  நீர் எங்கு இருந்தீர்.

சினிமாவை சினிமாவாகப் பார்க்காமல், மக்களின் அறியாமையை பயன்படுத்தி பால்வார்த்தது எந்தவை?

எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஜர், ஜெயலலிதா, விஜயகாந்த்… இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள் சினிமாவை வைத்து அரசியலும், மக்களுக்கு சேவையும் செய்து முன்னுக்கு வந்தனர்.

இன்றுகூட கட்சிக்கூட்டம் என்றால் சினிமாக் கலைஞர்கள்தானே பிரதான உரையை ஆற்ருகின்றனர். அவர்களுக்குத்தானே கூட்டம் கூடுகின்றது. ஒரு அறிவு மேதை, ஒரு டாக்டர், ஒரு இஞ்ஜினியர் அந்த கூட்டத்தில் பேசுகின்றார் என்றால் நீர் கூட அந்தப்பக்கம் திரும்பிப்பார்ப்பீரா?

சினிமாத்துறை இலகுவாக எலாரிடமும் எடுபடும் என்றுதானே இதன் அர்த்தம். அப்படிப்பட்ட ஒரு துறை மூலம் இலங்கைத்தமிழருக்கு ஆதரவு கேட்கும் போது உங்களுக்கு ஏன் குத்துகின்றது? உமக்கு வர விருப்பம் இல்லாவிடில் வீட்டிலேயே இருந்திருக்கல்லாமே. ஏன் எதிர்காலத்தில் காணாமல் போய்விடுவோம் என்று பயமோ?

இவரைத்தவிர வேறுசிலரின் பேச்சும் வேடிக்கையாக இருந்தது.

“ஈழத்து மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தந்தி கொடுத்தால் மட்டுமே தனது ரசிகர்களாக இருக்கமுடியும்” என இளைய தளபதி விஜய் பேசும்போது கேட்டுக்கொண்டார்.

இதே தந்தியை கருணாநிதி கொடுக்கச் சொல்லியதும் அப்படி அனுப்பப்பட்ட தந்திகள் டெல்லியின் குப்பைக்கூடைக்குள் சென்றுவிட்டதும் நம்ம தளபதிக்கு அவர்களது ஒற்றர்கள் யாரும் சொல்லவில்லைப்போலும்.

மற்றவர்களை விட வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்திருப்பவர், கலைஞர் கருனாநிதி தன்னை முந்திக்கொண்டது குறித்து தெரியாதது வருத்தம் தான்.  தெரிந்திருந்தால் தந்திக்குப்பதில் Fax அல்லது e-mail  அனுப்புமாறு கோரியிருக்கலாம். அண்ணா…  என்னண்ணா… விட்டிட்டீங்கண்ணோய்….தந்தி அடிக்கச்சொன்னனிங்க தினத்தந்தி படிக்கலைங்களோ அண்ணா…. 🙂

——————————————————————

ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைத்தால் இந்திய அரசு கூடுதல் முக்கியத்துவத்துடன் அதைக் கவனிக்குமாம் என ராதாரவி கூறியுள்ளார்..

சிங்கள கடற்படையினால் கொல்லப்ப்டும் மீனவர்கள் எந்த நாடு என்பது ராதாரவிக்கு தெரியாதா? மத்திய அரசுக்கு எல்லா தமிழனும் ஒன்று தான் போலும்.

இந்த ஆறு மணிநேர உண்ணாவிரத அறப்போராட்டம் எவ்வளவு பிரச்சினைகள், இழப்புகள், தியாகங்களோடு நடக்கிறது என்பதை ராதாரவி தனது உரையில் தெரிவித்தார். இதற்காக பல படபிடிப்புக்கள் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டதாம். உங்கள் அளப்பரிய முயற்சிக்கு ஈழத்தமிழுலகம் கடமைப்பட்டதுதான்.

——————————————————————-

எஸ். ஜே. சூர்யா பேசும்போது தான் ஒரு ஈழத்தமிழரின் குடும்பத்தை தத்து எடுத்து வளர்க்க மத்திய அரசு ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அங்கு எல்லா மாவட்டங்களிலும் ஈழத்து மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்,  அங்கு சென்று ஒரு குடும்பத்தை எடுத்துக்கொள்ளலாம், அதற்கு எதற்கு மத்திய அரசு? ஒரு நடிகனாக அல்லாமல் இயக்குனராகவும் இருக்கும் உங்களுக்கு பொதுவா உலக விடயங்கள் மற்றவர்களை விட தெரிந்திருக்கும், உண்மையில் இங்கு ஈழத்து மக்கள் அகதிகளாக வாழ்வது கூட உங்களுக்கு தெரியாதா 😦

——————————————————————-

சிம்பு பேசிய போது , நயன்தாரா அந்தப் பேச்சை எப்படிக் கவனித்துக்கொண்டிருந்தார் என்பதைக் காட்டியதன் மூலம் தனது வறட்டுப்புத்தியை புரியவைத்தார் அந்த சன் தொலைக்காட்சி எடிட்டர்.

நேரடிஒளிபரப்பு எனக்கூறிய சன் தொலைக்காட்சி – நடிகர்கள் அல்லாத சினிமா தொழிற்சங்கத்தினர் பேசும் போதும், அல்லது பிரபலமாகாத நடிகர்கள் பேசும் போதும் கொஞ்சும்கூட சுரணையின்றி விளம்பரங்களைப் போட்டு நடுநிலை வகிக்காதது என்னவென்று சொல்வது.

ரஜனி பேசும் போது கூறினார் மிகப்பெரிய கட்டுப்பாடு தான் இவ்வளவு பெரிதாக இந்த உண்ணாவிரதம் நடைபெறக்காரணம் என்றார். எது எப்படி இருந்தாலும் அஜித்தைத்தவிர மற்ற அனைவருக்கும் நன்றிசொல்வார்கள் ஈழத்தமிழர்கள்.

இந்த உண்ணாவிரதத்தை காணத்தவறியவர்கள் இங்குசென்று பார்க்கல்லாம்