ஒரு இளைஞனின் அளப்பரிய சாதனை என்றுகூட சொல்லல்லாம்!

உலகையே ஆட்டிப்படைக்கும் அமரிக்காவில் ஒரு கறுப்பு இளைஞன் ஜனாதிபதி ஆவது எல்லாம் கனவு என்று கருதிக்கொண்டிருந்த வேளையில்,

ஜனாதிபதி வேட்பாளராக நிற்கப்போகின்றேன் என்று அந்த கறுப்பு இளைஞன் கூறியதும், இவனுக்கு என்ன பைத்தியமா என்று கருதியவர்கள் மத்தியிலும்,

இந்த இளைஞன் இன்று மகத்தான வெற்றி பெற்று உலகையே ஆச்சரியப்பட வைத்தது மட்டும் அல்லாமல், தாள்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையும் கொடுத்துள்ளார்.

உண்மையை சொல்லப்போனால், எத்தனையோ ஜனாதிபதிகள் வெற்றி பெற்று இருக்கின்றனர்… அவர்கள் அனைவரும் வெற்றி பெற்ற போது – உண்டான உலக மக்கள் அனைவரின் மகிழ்சியையை விட இன்று வெற்றி பெற்றுள்ள திரு.ஒபாமாவுக்காக மிகப்பெரிய மகிழ்ச்சி உலக மக்கள் கொண்டிருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.

 

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர்
என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.

 

ஒரு சுவார்சியமான விடயம். அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையில் ஒபாமா, ஹிலாரி மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் ஆகியோரது சமீபத்திய புகைப்படங்களும் அதற்கான விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விளக்கத்தில்,”ஒபாமா பிரசாரத்திற்கு செல்லும்போது, இந்து கடவுளான அனுமனின் சிறிய சிலையை தன்னுடன் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளது.

ஒபாமா, தனது குழந்தை பருவத்தில் இந்தோனேசியாவில் வசித்தார். அங்கு இந்துக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அங்கு இந்து கலாசாரம் மற்றும் இந்து கடவுள்கள் பற்றி அறிமுகம் அதிகம் . அதனால் ஒபமாவிற்கு இவை நன்கு தெரியும். இதுபற்றி ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன.

உலகின் வஞ்சிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உங்களின் மூலமாகவாவது விடிவு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, உங்கள் ஆட்சி உலகின் சிறந்த ஆட்சியாக திகழவேண்டும் என்றும் தமிழ் நெவிக்கேஷன் வாழ்த்துகின்றது!

இந்த காட்சியையும் கொஞ்சம் பார்த்து வையுங்களேன்

viko

ஒபாமா எழுத்துக்களின் கைவண்ணத்தில்

ஒபாமா எழுத்துக்களின் கைவண்ணத்தில், பெரிதாக்கிப் பாருங்களேன்

ஒபாமாவைப்பற்றி மேலும் அறிய இங்குசெல்லவும்