அடப்பாவிங்களா…
உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி, அது-இது என்று அயல் நாட்டு தமிழருக்காக அமர்க்களப் படுத்தியபோது உன் உணர்வுகளைக் கண்டு உலகத் தமிழினமே மெச்சியது!

இரண்டு தினங்களுக்கு முன் ஒரு சந்திப்பின் போதுகூட இங்குள்ள தமிழர்கள் – நீயெல்லாம் ஆயிரக்கணக்கில் திரண்டு டெல்லிவரை சென்று முளங்கியதாக பெருமைப்பட்டுக்கொண்டனர்.

அப்படிப்பட்ட நீ, உன் சகோதர மாணவணையே இப்படி விளாசிக்கட்டுகின்றாயே…

உன்கையில் மட்டும் சிங்கள ராணுத்தின் ஆயுதங்கள் இருக்குமாயின்…

இன்று உலகத்தமிழரும், இலங்கைத்தமிழரும் நீ சுடுகாட்டாய் ஆக்கவிருக்கும் இந்தியத் தமிழருக்காக உண்ணாவிரதமும், மனிதச்சங்கிலி போராட்டமும் ஆரம்பித்திருப்பார்கள்!! நல்ல வேளை உன்னிடம் அவை இல்லை.

ஆயுதம் இல்லாத சிங்கள ராணுவத்தை விட நீ சுப்பராகத்தான் விளாசுகின்றாய்!!!

குண்டுகளால் மட்டும் அல்ல கொம்புகளாலும் செலவில்லாமல் தமிழரைத் தாக்கல்லாம் என ஐடியாவை எடுத்துக்கொடுத்துவிட்டாயே மச்சி…

இனி யாராவது இலங்கைத்தமிழனுக்காக இந்தியாவில் இருந்து வாயை திறந்தால்… திறந்தவர் வாயில் நீ கொடுத்த அல்வாவை போடப்போரார் பாரேன். இந்த  வீடியோவை  போட்டுக்காட்ட  ராஜபக்க்ஷா டவுண்லோட் பண்ணி வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அப்படி நீ என்ன செய்துவிட்டாய்? நீயே நேரம் கிடைக்கும் போது ஒருதரம் பார்…