கனடாவில் இப்போ காரை ஓட்டிக்கொண்டு ‘செல் போன்’ உபயோகிப்பது பாதுகாப்பு இல்லை என்று ஒவ்வொரு இடமாக தடை செய்யப்பட்டுக் கொண்டு வரும் வேளை, இதுவும் ஒரு சிந்திக்கத்தக்க விடயமாகவே இருக்கின்றது.

நேற்று காலை 911க்கு வந்த போன்னை அடுத்து Toronto பெரும்பாகத்தில் உள்ள Highway 7 ல் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர் பொலிசார். அங்கு ஒரு கார் வீதியோரத்தில் நின்றிருந்த விளக்குக் கம்பத்துடன் மோதி கவிழ்ந்த நிலையில் இருந்தது.

கிட்ட சென்ற பொலிசாசுக்கு ஒரு அதிர்ச்சி!

21 வயது பெண்மணி ஒருவர் காரினுள்….

தலை, முகம் முழுவதும் பாலினாலும், சீரியலினாலும் அபிசேகம் செய்தநிலையில்…

ஆமாம்! காரை ஓட்டிக்கொண்டு – காலை உணவு உட்கொட்டிருக்கின்றார் அம்மணி!

சும்மா வீட்டில் பாலும் சீரியலும் உண்ணும் போதே சிறிதேலும் சிந்தாமல் உண்ணுவது கொஞ்சம் கஸ்டம். இதில் காரை ஓட்டிக்கொண்டு…. அசாத்தியமான அம்மணிதான்!

நாம் எல்லோரும் பலதடவை பார்த்திருக்கின்றோம், வாகனம் ஓட்டுபவர்கள் – வாழைப்பழம் உண்ணுவதையும், சான்விச் சாப்பிடுவதையும், குளிர்பாணங்களை அடிவரை அண்ணாந்து குடிப்பதையும், டோ-நட் கடிப்பதையும், முள்ளுக்கறண்டியினால் உணவு உண்பதையும்….. ஏன் லிப்ஸ்டிக் பூசுவதையும், மேக்கப் பேடுவதையும் கூடத்தான்!

இவை எல்லாம் மக்கள் மட்டுமல்லாமல் பொலிசாரும் தான் செய்கின்றனர்!!!

இவற்றினால் வரும் பாதுகாப்பு குறைபாட்டுக்கு என்ன சட்டம் போடலாம்?