ஞாயிறு, திசெம்பர் 7th, 2008


Georgia Aquarium, Atlanta, USA: உலகின் மிக பெரிய மீன் காட்சியகம் இதுதான். இந்த காட்சியகத்தில் சுமார் 500 மீனினங்கள் வளர்க்கப்படுகிறது, சுமார் 100,000 கடல்வாழ் உயிரினங்களை உள்ளடக்கியது. இதில் 8.1 million US gallons அளவு கடல் நீர் நிரப்பபட்டுள்ளது. குறிப்பாக திமிங்கலங்கள், சுறா மீன்கள் போன்ற மிக பெரிய கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வளர்க்கப்படுகிறது.

நன்றி தமிழன் சுவடு.

குழந்தைவேல் கதிர்காமத்தம்பி

குழந்தைவேல் கதிர்காமத்தம்பி (குட்டி அப்பா) பிறப்பு 2.4.1921, மறைவு 7.12.2008

வல்வையை பிறப்பிடமாகவும், றஞ்சனா தியேட்டர் மற்றும் மகேஸ்வரி பேக்கரி உரிமையாளருமாகிய திரு. குழந்தைவேல் கதிர்காமத்தம்பி அவர்கள் 7.12.2008 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், தங்கம் ஆகியோரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, தங்கப்பொன்னுவின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, வேதாரணியம்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலம்சென்ற மகேஸ்வரியின் அன்புக்கணவரும்,

அருமைச்செல்வத்தின் அன்புத் தந்தையும், சித்திரலேகாவின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், இந்திராணி ஆகியோரின் சம்பந்தியும்,

நிரஞ்சன் – ரேனுகா(சிங்கப்பூர்), சாந்தி – ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), றஞ்சனா – தவலிங்கம்(அவுஸ்திரேலியா), சிறிதரன் – ரதி(கனடா), சசீகரன் – கவிதா(அவுஸ்திரேலியா), மிர்னா – சண்முகராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனும்

நிசாந்தன், சர்லேசன், நவீன், அஸ்வின், சிறிணேஷ், விக்னேஷ், ஜெயரோன், கிருஷ்ரோன், கரிஸ், தினேஸ், கஜன், துர்க்கா ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 7.12.2008 அன்று திருச்சியில் உள்ள மகனின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் திருச்சி ஒய்யாமாரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

மகன் அருமைச்செல்வம் – திருச்சி +91 431 2775260

பேரன் நிரஞ்சன் – சிங்கப்பூர் +65 6 561 7839

பேத்தி சாந்தி – அவுஸ்திரேலியா +61 35 674 3095

பேத்தி ரஞ்சனா – அவுஸ்திரேலியா +61 29 621 7001

பேரன் சிறிதரன் – கனடா +1 905 455 9392

பேரன் சசீகரன் – அவுஸ்திரேலியா +61 29 863 3583

பேத்தி மிர்னா – லண்டன் +44 208 648 6935