நேற்று எம் ஏரியாவில் நடந்த உண்மைச் சம்பவம்!

ஒரு தமிழ் அம்மணி தமிழர்கள் அதிகம் வாழாத ஒரு கனடிய நகரததில் காலையில் தனது கணவனின் புத்தம் புதிய வானில் கடைக்குச் செல்கின்றார். சாலை விதிகளுக்கு அமைய அவர் வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றார்.

திடீரென இன்னும் ஒரு வான் அசுரவேகத்தில் வந்து அம்மணியின் பக்கமாக முட்டி மோதி வானின் முன்பகுதி அப்பளம் போல ஆகிவிட்டது. சம்பந்தப்பட்ட இருவருக்கும் கடவுள் புண்ணியத்தில் பெரிதாக ஏதும் நடைபெறவிலலை.

இதுபோல் பல விபத்துக்கள்…. இங்கு முக்கியமாக  பார்க்கவேண்டிய  விடயம் இனிமேல் தான் ஆரம்.

சற்று நேரத்தில் வந்த பொலிஸிடம் இருவரும் “நான் வாகனத்தை சரியாகத்தான் செலுத்தினேன்” என்று வாதிட்டனர்.

அந்தநேரம் பார்த்து இன்னும் ஒரு வெள்ளை அம்மணி வந்து வான் ஓட்டி வந்த தமிழ் அம்மணிக்காக தான் கண்டதை கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் -14º குளிரில் வெளியே   நின்று சற்று நடுங்கியபடி பொலிசாரிடம் சாட்சி கூறி, தனது கைப்பட எழுதியும் கொடுத்துவிட்டு சென்றார்.

இந்த வெள்ளை அம்மணியின் காரினுள் தனது சிறு மூன்று குழந்தைகளையும் வைத்திருந்தும், நூறு மைல்களுக்கு அப்பால் இருந்து வந்திருந்தும், ஒரு தமிழ் பெண்ணிற்காக சாட்சி சொல்லிய அந்தப் பெண்மணிக்கு நன்றி சொல்லியே  ஆகவேண்டும் .

இந்த வெள்ளைக்கார அம்மணிமட்டும் அந்த வேளை குளிரையோ, தனது பிள்ளைகளையோ, தான் போகும் தூரத்தையோ, இனத்தையோ எண்ணி நாம நம்ம வேலையைப் பார்ப்போம் என்று போயிருந்தால்…

ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டிருப்பார், அவரின் இன்ஸூரன்ஸ் எகிறியிருக்கும், புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கும், பத்தாதுக்கு தன் கணவணிடமும் வாங்கிக்கட்டியிருப்பார்!??!

வாசகர்களாகிய நீங்கள் கூட நாளை இதுபோல் ஏதும் கண்டால் நமக்கேன் இந்த வேலை என்னு தட்டிக்களிக்காமல் உண்மைக்கு சாட்சி கூறுங்கள். உங்களுக்கு அவசரமான வேலையிருந்தாலும் உங்கள் பெயரையும், தெலைபேசி எண்ணையும் கொடுத்துவிட்டுத்தன்னும் செல்லுங்கள். பின்னர் பொலிஸார் உங்களிடம் சாட்சி பெற்றுக்கொள்ளுவார்கள்.