விஜய் வீட்டில் இருக்கும் அனைத்து கார்களிலும், அவற்றின்

பதிவு எண்ணின் கூட்டுத் தொகை ஒன்பது என்றே இருக்கும். சென்டிமெண்டாக   அந்த எண் அவருக்கு வொர்க் அவுட் ஆகிறதாம்.

இரவு நேரங்களில் யாருடைய தொந்தரவும் இல்லாத சூழ்நிலையில் தனிமையில் தனது பைக்கில், ஜாலியாக ஒரு ரவுண்ட் அடிப்பது விஜய்க்கு மிகவும் பிடித்த விஷயம்.

விதவிதமான கெட்டப் சேஞ்ச்சில் விஜய்க்கு அதிகம் ஆர்வமில்லை. ஆனால் தனக்கு செட்டாகிற சில கெட்டப்களில் பர்சனல் போட்டோ செஷன் செய்திருக்கிறார். ஆனால் இந்த கெட்டப் சேஞ்ச் போட்டோக்களை இதுவரை வெளியிட்டதேயில்லை விஜய்.

விஜய் வேளாங்கன்னி மாதாவின் தீவிர பக்தர். தனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்பும் வேளாங்கன்னி சென்று மாதாவை வணங்கிவிட்டுதான் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்குவார்.

ஷூட்டிங் முடிந்து
வீட்டிற்குச் செல்லும்போதோ,

நண்பர்களைச் சந்திக்கக் கிளம்பும்போதோ தானே டிரைவ் செய்வது விஜய்க்கு மிகவும் பிடித்த விஷயம். கார் ஓட்டும்போது காரினுள் அதிகம் அதிராமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலப் பாடல்கள் கேட்பது அவரது பொழுது போக்கு. இதனால் விஜய் காரினுள் பலமொழிப் பாடல்களின் டி.வி.டி.க்கள் எப்பொழுதும் இருக்கும்.

விஜய்க்கு அவரது அப்பா சந்திர சேகர் மீது அலாதி ப்ரியம். வீட்டிற்கு போன் செய்தாலோ, அவரது அம்மாவிற்கு போன் செய்தாலோ `நான் விஜய் பேசுறேன். அப்பா இருக்காங்களா?’ என்றுதான் பேச்சை ஆரம்பிப்பது வழக்கம். அந்தளவிற்கு விஜய் அப்பா கோண்டு.

மேக்கப் விஷயத்தில் அதிகம் மெனக்கெடுவது இல்லை விஜய். லேசாக டச் அப் செய்துவிட்டு நடிக்க வந்துவிடுவார். ஆனால் ஹேர் ஸ்டைலிலும், காஸ்ட்யூம் விஷயத்திலும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வார். தனது மனைவி சங்கீதா தனக்காக வாங்கி வரும் காஸ்ட்யூம்களையும் தனது டிஸைனர் ராஜேந்திரன்  டிஸைன் செய்யும் காஸ்ட்யூம்களையும் விரும்பி அணிவார்.

தான் நடிக்கும் படங்களின் முக்கிய காட்சிகளையோ, கடினமான டான்ஸ் மூவ்மெண்ட்களையோ பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விஜய் ரிகர்சல் பார்ப்பது இல்லை. வீட்டில் தனிமையில் இருக்கும் போது அவற்றை ரிகர்சல் செய்து பார்ப்பதுதான் விஜயின் வழக்கம்.

விஜயின் ரிலாக்ஸ் ஸ்பாட் அவரது கேரவேன்தான். ஷூட்டிங் நேரங்களில் ப்ரேக் கிடைத்தால் போதும், கேரவேனிற்குள் நுழையும் விஜய் அங்கிருந்தபடியே தனது வீட்டிற்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் போன் செய்து  மனம் திறந்து பேசுவது வழக்கம். பிறகு கொஞ்சம் கேரவேனிலேயே ஓய்வு.

விஜய் தனது படம் ஷூட் முடிந்ததும் குடும்பத்தோடு ஓய்வெடுக்க விரும்பிச் செல்லும் இடம் லண்டன். அங்கு தனது  மாமனார் வீட்டிற்கு ஒரு விசிட் அடித்து விட்டு வருவது வழக்கம்.

நன்றி-குமுதம்