புதன், திசெம்பர் 31st, 2008


கிரீன்விச்சிலுள்ள கடிகாரம்

2008 ஆம் ஆண்டு நிறைவாக முடிவுக்கு வரும் போது, இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட நீண்டு இருந்தது என்பதற்கு அறிவியல் ரீதியாக ஒரு பகுத்தறிவு விளக்கம் இருக்கிறது.

இந்த ஆண்டு நான்காண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு என்பதால் பிப்ரவரி மாதம் ஒரு முழுநாள் கூடுதலாக கிடைத்தது மட்டுமல்ல, இந்த ஆண்டு லீப் நொடி என்றழைக்கப்படும் ஒரு நொடியும் கூடுதலாக கிடைக்கப் போகிறது.

ஆண்டின் இறுதி நாளான இன்று புத்தாண்டு தொடங்குவதற்கு முன்னர் இந்த ஒரு நொடி கூடுதலாக இருக்கும். இவ்வாறான இரட்டை அனுகூலம் 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஏற்படுகிறது.

இதன் மூலம் அறிவியலாளர்கள் நிம்மதியாக பெருமூச்சு விடமுடியும். ஏனென்றால் அணு கடிகார நேரத்துடன் புவி ஒருங்கிணைந்து இருக்கும். இதன் மூலம் நேரத்தை எந்த அளவுக்கு துல்லியமாக காக்க முடியுமோ அந்த அளவுக்கு துல்லியமாக காக்க முடியும்.

எதற்காக ஒரு நொடி கூடுதல்?

அணு கடிகாரம்

புவியின் தற்போதைய சுழற்சி முன்னர் இருந்ததைவிட சீராக மிகவும் மெதுவாக குறைந்து வருவதால், இந்த சிறிய மாற்றம் தேவைப்படுகிறது. புவியின் சுழற்சி வேகம் இவ்வாறு குறைந்தது வருவதற்கு காரணம் புவி வெப்பமடைதலும் கடல் அலைகளின் அசைவுகளும் இயக்கமும் காரணம்.

உலகளவில் கணினி சர்வர்கள், மொபைல் தொலைபேசி சேவைகளை வழங்குபவர்கள், விண்ணில் ஒரு நிலையில் இருந்து செயல்படும் செயற்கை கோள் கருவிகள் ஆகியவை அணு கடிகாரங்களை ஆதாரமாகக் கொண்டுதான் தமது நேரங்களை சரி செய்கின்றன.

எனவே இந்த ஆண்டு முடிவுக்கு வந்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கும் தருணத்தில், 2008 ஆம் ஆண்டில் ஒரு நொடி கூடுதலாக இருந்ததை நினைவு கூறுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமே.

 

New Year’s resolution ஆமாம்… புதுவருட தீர்மானம்!

கடக்கப்போகும் ஆண்டில் குறைகளை தள்ளி வைத்துவிட்டு பிறக்கப்போகும் இனிய ஆண்டில் புதிய தீர்மானங்கள் ஏற்படுத்துவோம்!

 

தீர்மானம் என்பது ஒவ்வொருவருக்கும் எப்பவுமே இருக்க வேண்டிய ஒரு விடயம். முடியாமல் போனால் குறைந்தது புதுவருடத்தில் தன்னும் எடுக்கப்பட் வேண்டிய ஒன்று.

 • காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ளுதல்
 • என் வேலைகளை நானே பார்த்தல்
 • உடலை நல்லபடியாக வைத்திருக்க கொஞ்சம் உடற்பயிற்சி
 • காலை உணவின் மகத்துவம் புரிந்து அதனை உண்ணல்
 • வேலைக்கு சற்று நேரத்திற்கு முன்னமே செல்லுதல்
 • கோபத்தை குறைத்தல்
 • புகைப்பதை விட்டுவிடல்
 • குடிப்பதை விட்டுவிடல்
 • TV நாடகம் என்று மூள்காமல், குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுதல்
 • தவறவிட்ட தொலைபேசி அழைப்பை திருமப் அழைத்தல்
 • கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருத்தல்
 • எப்பவும், எதிலும் குறைகூறுவதை நிறுத்துதல்
 • குதர்க்கப்பேச்சை தவிர்தல்
 • அடுத்தவர் மனம் நோகாமல் நடந்துகொள்ளல்
 • நண்பரோ-உறவினரோ குறைந்தது பிறந்தநாளிற்காவது அவருக்கு வாழ்த்து கூறுதல்.
 • Shopping… shopping… என்று கண்டதையும் வாங்கிக் கொட்டாமல், கொஞ்ச காசை சேமித்தல்
 • உறைப்பு, உப்பு, இனிப்பு, கொழுப்பு இவைகளை குறைத்தல்
 • படுக்கப்போகும் முன் பல் விளக்குதல்
 • ஆண்களாய் இருந்தால் ஆத்துக்காரிக்கு சமைக கொஞ்சம் உதவுதல் 🙂

அடடா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…

அவரவருக்கு உள்ள குறைகளை கண்டு, தேவைகளை புரிந்து -அதற்கேற்ப இந்த புதிய ஆண்டில் நாம் ஏற்படுத்தப்போகும் தீர்மானம் எம் வாழ்வின்  மிகப்பெரிய இனிய திருப்பத்தை உண்டாக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

பளையன களித்து புதியன புகுத்தி வாழ்வில் மேம்படுவோமாக!

80களில் எமக்கு தொலைக்காட்சி பரிச்சயமான காலம். ஆரம்பத்தில் கறுப்பு-வெள்ளை, அதனைத்தொடர்ந்து கலர்… இப்படி தொலைக்காட்சி வளர்ந்து வந்த வேளை எம்மை அதிகம் கவர்ந்தது இந்த மேடை நிகழ்ச்சிகள்.

திரைப்படத்தின் பாடல்களை, நிஜத்தில் பாடியவர்கள் கொண்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சி – அந்த கலைஞர்களை காதல் கொள்ளக் கொண்டு சென்றது என்றால் மிகைஅல்ல…

அதே போன்றதொரு இனிய பாடல் இது. உயிரோட்டமாய் பாடியிருக்கும் SPB . மலையளத்து Asiannet என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து…..

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

(இளைய நிலா பொழிகிறதே)

வரும் வழியில் பனி மழையில்
பருவநிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவமகள் விழிகளிலே கனவு வரும்

(இளைய நிலா பொழிகிறதே)

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

(இளைய நிலா பொழிகிறதே)

இதயக்காதல்

மகிழ்ச்சி