80களில் எமக்கு தொலைக்காட்சி பரிச்சயமான காலம். ஆரம்பத்தில் கறுப்பு-வெள்ளை, அதனைத்தொடர்ந்து கலர்… இப்படி தொலைக்காட்சி வளர்ந்து வந்த வேளை எம்மை அதிகம் கவர்ந்தது இந்த மேடை நிகழ்ச்சிகள்.

திரைப்படத்தின் பாடல்களை, நிஜத்தில் பாடியவர்கள் கொண்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சி – அந்த கலைஞர்களை காதல் கொள்ளக் கொண்டு சென்றது என்றால் மிகைஅல்ல…

அதே போன்றதொரு இனிய பாடல் இது. உயிரோட்டமாய் பாடியிருக்கும் SPB . மலையளத்து Asiannet என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து…..

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

(இளைய நிலா பொழிகிறதே)

வரும் வழியில் பனி மழையில்
பருவநிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவமகள் விழிகளிலே கனவு வரும்

(இளைய நிலா பொழிகிறதே)

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

(இளைய நிலா பொழிகிறதே)