1752-ஆம் ஆண்டிற்கான செப்டம்பர் மாத காலண்டரை நீங்கள் பார்த்தால் (இங்கு பார்க்கலாம்) இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த மாதத்தில் 2-ம் திகதிக்கப்புறம் நேரடியாக பதினான்காம் திகதிக்கு போய்விடும். இடையிலுள்ள 11 நாட்களும் மாயமாய் மறைந்திருக்கும். ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் கலண்டர் முறையை பழைய ஜூலியன் நாட்காட்டி முறையிலிருந்து கிரிகோரியன் நாட்காட்டி முறைக்கு மாற்றினார்கள். அதனால் இப்படி சின்னதாக ஒரு அட்ஜஸ்ட்மண்ட் செய்யவேண்டி வந்தது.

சின்ன கடிஜோக் ஒன்று:

காலண்டர் ஏன் ரொம்ப பந்தா பண்ணுது?
Because it has a lot of dates!