கடிதம் என்பது ஒருகாலத்தில் உன்னத நிலையில் இருந்த ஒரு உணர்ச்சி காவியம்.

கணவன் மனைவிக்கிடையில், காதலன் காதலிக்கிடையில், தாய் பிள்ளைக்கிடையில், சகோதர சகோதரிகளுக்கிடையில், நண்பர் நண்பிகளுக்கிடையில், உறவினர்களுக்கிடையில்….

கடிதம் மூலம் கல்யாணம் தொட்டு கருமாரி வரை பரிமாறப்பட்டு வந்தன.

கடிதம் கொடுத்து கால்கட்டு பட்டவர்கள் பலர்…
கடிதம் கொடுத்து காலில் கிடப்பதால் வாங்கியவர் சிலர் …

தபால்காரன் எல்லாம் தேவதூதன் ஆனகாலம் அது…

இப்படி ஒரு உணர்ச்சி பாலமாய் இருந்த இந்த கடிதம் இப்போது அறிவியல் வளர்ச்சி என்னும் காரணத்தால் கானாமல் போக்கொண்டிருக்கின்றது என்பது ஒரு வேதனையான உண்மை.

என்னதான் தொலைபேசியில் சுடச்சுட உரையாடினாலும், ஈ-மெயிலில் அசுர வேகத்தில் பரிமாறினாலும் – ஒரு கடிதம் வந்து, எங்கள் கைகளில் தவழ்ந்து, அதை ஆர அமர வாசித்து உயிர்ப்புப்பெரும் சுகமே தனிதான்.

கடிதங்கள் எழுதியே யாரையும் கனிய வைக்கமுடியும் என்னும் அனுபவத்தை நான் உட்பட நீங்களும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

எப்போதாவது நேரம் கிடைக்கும் போது ஒரு கடிதமாவது உங்களை நேசிப்பவருக்கு எழுதுங்கள்.

உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களையும் எழுத தூண்டுங்கள்.

இல்லையேல் ‘ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதி, புறாவில் காலில் கட்டிய’ கதையை கேட்பதுபோல் எங்கள் சந்ததி நாளை கடிதக்கதையையும் கேட்கும்.

ஒருவரை உங்கள் வசமாக்க அவர்களுக்கு கடிதம் எழுதுங்கள் என்னும் விடயத்தை இவ்வளவு அருமையாக படமூலம் காட்டப்பட்டுள்ளது…

படம் அனுப்பியவர்- கிருஜாந்தினி கேதீஸ்வரன்