வாழ்வியல் தத்துவம் என்பது ஒரு மந்திரம் போன்றது.

வேதங்களில் வரும் மந்திரங்களினால் நல்லது நடக்குமோ எனக்குத்தெரியாது. ஆனால் இந்த வாழ்வியல் தத்துவம் என்னும் மந்திரம் நிச்சயம் வாழ்வை நெறிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”

இது ‘அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி’ அவர்கள் கூறியது.

எம் எண்ணத்தில் ஆரம்பித்து கோர்வையாக தொடர்ந்து அந்த எண்ணமே எம் வாழ்வை வடிமைக்க காரணமாகிவிடுகின்றது.

எனவே – நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கின்றது என்பதுமாதிரி நடந்துவிடாமல் நல்தை நினைக்க பழக்கப்படுத்திக்கொள்வோம். மனம் ஒரு குரங்கு என்பர். நேரத்துக்கு நேரம் தாவும். அதனை எல்லாம் கட்டுப்படுத்தினால் தான் காரியம் நடக்கும்.