ஞாயிறு, ஜனவரி 25th, 2009தேவையான பொருட்கள்:

கோழி – அரை கிலோ , பெரிய வெங்காயம் -1 கப் நறுக்கிய தக்காளி -1 கப்
மஞ்சள் தூள்-அறை ஸ்பூன்,மல்லி தூள்-1 டீ ஸ்பூன்,மிளகாய் தூள் -தேவையான அளவு,உப்பு – தேவையான அளவு,இஞ்சி பூண்டு விழுது – டீ ஸ்பூன்,வெண்ணை -3 டீ ஸ்பூன்,சிகப்பு கலர் பவுடர் சிறிது .

தாளிக்க :
சோம்பு,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,கறிவேப்பிலை,எண்ணெய்

அரைக்க :
தேங்காய் -அரை கப்,முந்திரி பருப்பு -10
(இவற்றை தனித்தனியாக அரைத்து கொள்ளவும் )

செய்முறை :
வாணலியில் எண்ணெய் + வெண்ணை விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது ,மஞ்சள் ,மிளகாய்த் தூள் ,மல்லித்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கோழி,கலர் பவுடர் , அரைத்த தேங்காய் , இரண்டு டம்லர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். கோழி நன்றாக வெந்தவுடன் அரைத்த முந்தரி விழுதை சேர்த்து நன்கு கிளறி குறைந்த தீயில் சிறிது நேரம் வேக விடவும் . அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.
– அகல்யா

நாளை 25-ம் தேதி திங்கட்கிழமை வானில் ஆபூர்வ சூரிய கிரகணம் : வழக்கமாக ஏற்படும் சூரியகிரகணம் போன்று அல்லாமல் சிறிய மோதிர வடிவில் இந்த கிரகணம் தோன்றும் என்றும் இலங்கை, இந்தியாவின் தெற்கு மற்றும் தென்கிழக்குப்பகுதிகள் மட்டுமே இந்த அபூர்வக் காட்சியைக் காணமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சகட்ட கிரகணமானது இந்தியப் பெருங்கடலில் மாலை 1.29-க்கு தொடங்கி 4.04 மணி வரை நீடிக்கும். மதுரை, புதுச்சேரி போன்ற பகுதிகளிலிருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் இச்சூரிய கிரகணத்தைக் காண முடியும்.