ஐயா கலைஞரே;

 கணக்கு வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் வாத்தியார் அடிப்பார் என ‘சுகமில்லை’ என்று சொல்லிப்படுத்து, பள்ளியை கட்டடித்த ஞாபகம் தான் வருகின்றது

இலங்கையில் மனித அவலங்கள், ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படும் இக்கட்டான ஒரு வேளையில், ஒரு மிகப்பெரிய ராஜதந்திர வேலையை செய்துள்ளார் தமிழர்களின் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் அவர்கள். கேழுங்கள் செய்தியை…

முதுகுவலி காரணமாக முதலமைச்சர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,முதலமைச்சர் கருணாநிதிக்கு முதுகுப் புறத்தில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக, அதிக அளவிற்கு வலி ஏற்பட்டதால், மருத்துவர்கள் குறைந்தது ஒரு வாரக் காலத்திற்காவது ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதின் பேரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியூர் பயணங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், போன்றவற்றைத் தவிர்த்து, சில நாட்கள் ஓய்வெடுப்பது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் அது வரை தள்ளி வைக்கப்பட்டு, பின்னர் அந்த நிகழ்ச்சிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது

கலைஞரே உங்கள் காய்நகர்த்தல் எமக்கு புரியாதது அல்ல…

ஆஸ்பத்திரியில் இருந்து வந்ததும் உங்களை நம்பி உயிர்விட்ட தமிழருக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் உங்கள் முதல் வேலை என்பதும் தெரியும்.

அதற்கு இப்பவே கதை-வசனம் எழுதுவதும் எமக்குத்தெரியும்!