ஜனவரி 2009


காலையில் வளமையாக உரையாடும் ஒரு நேயர் இந்த கனடாவின் காலநிலையை மிகவும் நொந்துகொண்டார்.

ஏன் இப்படி வாழ்க்கையே வெறுத்தது மாதிரி பேசுகின்றீர்கள் என்று கேட்டேன்.

பின்ன என்ன பார்த்தி, எப்ப Weather சனலை தட்டினாலும் -15, -20, -30 என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். வெளியே போவதென்றாலே விசர்தான் வருகின்றது, என்றார்.

உண்மைதான். தெரிந்தோ தெரியாமலோ இப்படி குளிர் நாடுகளுக்கு வாழ வந்துவிட்டோம், சகித்துத்தான் ஆக வேண்டும்.

எப்பவும் குளிரையே காட்டிக்கொண்டிருக்கும் Weather சனல் ஒரு மாறுதலுக்காக Hot Weather சனலாக மாறினால் என்ன? ஆதங்கப்படும் நேயர் முதல் கொண்டு அனைவரும் இதனை விரும்புவார்கள் என்றே நம்புகின்றேன். குளிர் நாடுகளின் தொலைக்காட்சி நிர்வகிப்பவர்கள் கருணை வைப்பார்களா?

அதெப்படி குளிர்காலத்தில் சூடா weather report சொல்லுவது என்கின்றீர்களா? இதோ உதாரணத்திற்கு ஒரு Hot Weather channal 🙂

வாசகர்கள் என்ன கொக்கா? நான் Hot என்று சொன்னது… புரிந்திருக்குமே…!

என்ன நேயரே, அதுக்குள்ள எழும்பிவிட்டீர்கள்?… ஓ தொலைக்காட்சி நிலையத்துக்கு மனுக்கொடுக்கவா?… சரி, சரி போய்ட்டு வாரும்!

baby911

பிரிட்டிஸ் கொலம்பியாவில் White Rockல் வசிக்கும் 11மாதக்குழந்தை ஒன்று அவரசத்திற்கு அழைக்கும் 911 ஐ அழைத்திருக்கின்றது.

அழைப்பு நீண்ட நேரம் இருக்க, எந்த பதிலும் வராதபட்சத்தில் உடனடியாக பொலிஸார் அந்த வீடுக்கு விரைந்தனர்.

பலதடவை கதவு தட்டப்பட்டும் திறக்காத பட்சத்தில் உள்ளே நுளைந்த பொலிஸாரை ஆச்சரியத்துடனும் பீதியுடனும்  எதிர்நேக்கினார் 29வயதுள்ள குழந்தையின் தந்தை.

“நான் 911ஐ அழைக்கவில்லை… என்று முற்றாக மறுத்தார் அந்த மனிதர். அப்போதுதான் பார்த்தனர், அங்கிருந்த 11மாத குழந்தை தன் கையில் ஒரு cordless phone ஐ வைத்து விழையாடிக் கொண்டிருந்தது. நிலமையை ஊகித்த பொலிசார் cordless phone ஐ வைத்து விளையாடிய குழந்தை தவறுதலாக 911ஐ அழைத்தது புரியவந்தது.

இதுவல்ல சுவார்சியம்! இனி நடந்ததை தொடர்ந்து படியுங்கள்..

சரி… குழந்தையிடம் cordless phone களை விளையாடக் கொடுக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கிவிட்டு புறப்படும் வேளை பொலிசாருக்கு ஏதோ உறுத்த, சற்று வீட்டை நோட்டம் விட்டனர்.

பொலிசாரின் சந்தேகம் லேசானது அல்ல என்பதுபோல் அந்த வீட்டினுள் போதை வஸ்த்து செடியான 500 மர்ஜுவானா செடிகளை வீட்டினுள் வளர்ப்பதை கண்டுபிடித்தனர்!

அப்புறம் என்ன ராஜமரியாதையுடன் தந்தை அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

குழந்தையை Ministry of Children and Family Development எடுத்து பின்னர் தனித்து வாழ்ந்த குழந்தையின் தாயிடம் ஒப்படைத்தனர்.

கடவுள் கொடுக்கவேண்டிய தண்டணையை குழந்தையே கொடுத்துவிட்டது….

குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று!

மகாலெட்சுமி சரவணமுத்து

மகாலெட்சுமி சரவணமுத்து

வல்வை தீருவிலைச்சேந்த திருமதி மகாலெட்சுமி சரவணமுத்து அவர்கள் சென்னையில் இன்று காலமானார்.

அன்னார், திரு.சரவணமுத்துவின்(சென்னை) அன்பு மனைவியும்,

காலம் சென்ற ஜெகதீசன், நவஜீவானந்தா(மொன்றியல்), யோகானந்தா(மொன்றியல்), சுபானந்தா(மொன்றியல்), ராஜானந்தா(லண்டன்), விஜாளமகாதேவி – தங்கா(லண்டன்) ஆகியோரின் தாயும்

காலஞ்சென்றவர்களான அருளம்பளம்(ஓவசியர்), வேலும் மயிலும், சுப்பிரமணியம், தங்கராசா, நாராயணசாமி மாரிமுத்து ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

தொடர்புகளுக்கு:

யோகாநந்தா 1 613 937 0961

சுபாநந்தா 1 514 855 9153

தங்கா 1 44 208 715 0758

வரலாற்றில் ஒரு சாதனையை ஏற்படுத்திய திரு.பராக் உசேன் ஒபாமா (Barack Hussein Obama) அவர்களின் இன்றய பதவியேற்பு.

இன்னாளில் அந்த சாதனை வீரனுக்கு எம் வாழ்த்துக்கள்!

சிலநாட்களுக்கு முன்னர் இட்ட பதிவில் ஒபாமாவிடம் ஒரு கோரிக்கை வைக்கும் முகமாக கைஎழுத்து போடச்சொல்லி பதிவொன்று இட்டிருந்தேன்.

இந்த கட்டுரையை எழுதும் வரை ஆகக்கூட 134669 பேர் மட்டுமே பதிந்துள்ளனர்.

மகாஜனங்களே… சுமார் 10கோடி தமிழர் உலகில் வாழ்வதாக எண்ணுகின்றேன்.(பிழையாய்யின் சரிசெய்யவும்) இவர்களில் மற்றவர்கள் எல்லாம் என்ன செய்கின்றனர். சரி கணணி வசதி எல்லாருக்கும் வேண்டும் என்று வைத்துக்கொண்டாலும், கனடா, லண்டன், டென்மார்க், நோர்வே, சுவிஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில் வாழ்பவர்களிடம் கட்டாயம் கணணி இருக்கும். அவர்கள் எல்லாம் என்ன செய்கின்றனர்.

சரி, விடுபட்டவர்கள் இன்றாவது அதனைச்செய்யுங்கள்

பதவி ஏற்ற ஒபாமாவிக்கு ஒரு ஒற்றுமையான செய்தி சொல்லவேண்டாமா?

இதோ அந்த கைஎழுத்து இடும் பக்கம்

தேவையானவை

கொண்டைக்கடலை – 1 கப்
உருளைக்கிழங்கு – 1 (optional) (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உப்பு
எண்ணெய்

வறுத்து பொடிக்க:

கொத்தமல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 4 அல்லது 5 சிறிய துண்டுகள்
கிராம்பு – 2
பாதாம் – 4
முந்திரி – 10

எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.

செய்முறை

  • கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வைத்து 3 விசில் விட்டு எடுக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதங்கியதும், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • சிறிது தண்ணீர் விட்டு உருளைகிழங்கை வேக விடவும்.
  • பிறகு கொண்டைக்கடலை சேர்த்து, அரைத்த பொடி , மிளகாய்த்தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • மல்லித்தளை சேர்த்து எடுத்து வைக்கவும்.


 

பூரி, சப்பாத்தி அல்லது தோசையுடன் சப்பிடலாம்.

Cassetteடுக்களுடனும், CDக்களுடனும் திரிந்த நாம் iPod என்னும் mp3 player வந்ததும் இசைப்பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்!

உருவத்தில் மிகச்சிறிய இந்த சாதனம், மற்ற playerகளைப்போல் பாடல்களை பதிவதில் உள்ள சிரமம், பராமரிப்பதில் உள்ள சிரமம் எதுவும் இன்றி – சில கணங்களில் இலகுவாக கையாளத்தக்கதாக வந்தது நிச்சயம் ஒரு பரினாமவளர்ச்சிதான்.

கீழே உள்ள படத்தை பெரிதாக்கிப்பார்கவும் அதன் உருவம், சேமிக்கும் அளவு, விலை என்பன எவ்வாறு வெறுபடுகின்றன என்று.

இருந்தாலும் விலை இன்னும் சற்று அதிகமாகத்தான் தோன்றுகின்றது.

இன்னுமொரு தத்துருபமான வீடியோ… நேற்று US Airways விமானம் ஒன்று Hudson River ல் Crash Landing ஆன வீடியோவை பலர் எல்லா தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்பீர்கள்.

அதைவிட விமானம் பறந்துவந்து தண்ணீரில் விழுவதையும், உடனே கதவுதிறந்து பயணிகள் வெளிவருவதும், அதனை தொடர்ந்து பக்கத்தில் இருந்த ferrieக்கள் விரைந்து வந்து காப்பாற்றுவதையும் இங்கு காணலாம்

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »