எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் இன்று.
இந்த மாமனிதரைப்பற்றி கீழே உள்ள விவர்ணப்படங்கள் மூலம் பாருங்கள்.
ஜனவரி 17, 2009
எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் இன்று.
இந்த மாமனிதரைப்பற்றி கீழே உள்ள விவர்ணப்படங்கள் மூலம் பாருங்கள்.
ஜனவரி 16, 2009
உங்கள் மனைவியை நீங்கள் நேசிக்கின்றீர்களா…?
எவ்வளவு தூரம் நேசிக்கின்றீர்கள்…?
இப்படி மிகவும் ஆகா-ஓகோ என்று பாசம் வைக்கும் கணவன் மார்களை மனைவிமார் விரும்பமாட்டாள்!!!
என்ன ஆச்சரியமா இருக்கா?
ஆம். இதுதான் உண்மையும் கூட….
சரி, கீழே உள்ள வீடியோவை பாருங்கள். பின்பு கொஞ்சம் ஆளமாக சிந்தித்துப் பாருங்கள். பார்த்தபின்பு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்!
ஜனவரி 15, 2009
கடிதம் என்பது ஒருகாலத்தில் உன்னத நிலையில் இருந்த ஒரு உணர்ச்சி காவியம்.
கணவன் மனைவிக்கிடையில், காதலன் காதலிக்கிடையில், தாய் பிள்ளைக்கிடையில், சகோதர சகோதரிகளுக்கிடையில், நண்பர் நண்பிகளுக்கிடையில், உறவினர்களுக்கிடையில்….
கடிதம் மூலம் கல்யாணம் தொட்டு கருமாரி வரை பரிமாறப்பட்டு வந்தன.
கடிதம் கொடுத்து கால்கட்டு பட்டவர்கள் பலர்…
கடிதம் கொடுத்து காலில் கிடப்பதால் வாங்கியவர் சிலர் …
தபால்காரன் எல்லாம் தேவதூதன் ஆனகாலம் அது…
இப்படி ஒரு உணர்ச்சி பாலமாய் இருந்த இந்த கடிதம் இப்போது அறிவியல் வளர்ச்சி என்னும் காரணத்தால் கானாமல் போக்கொண்டிருக்கின்றது என்பது ஒரு வேதனையான உண்மை.
என்னதான் தொலைபேசியில் சுடச்சுட உரையாடினாலும், ஈ-மெயிலில் அசுர வேகத்தில் பரிமாறினாலும் – ஒரு கடிதம் வந்து, எங்கள் கைகளில் தவழ்ந்து, அதை ஆர அமர வாசித்து உயிர்ப்புப்பெரும் சுகமே தனிதான்.
கடிதங்கள் எழுதியே யாரையும் கனிய வைக்கமுடியும் என்னும் அனுபவத்தை நான் உட்பட நீங்களும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
எப்போதாவது நேரம் கிடைக்கும் போது ஒரு கடிதமாவது உங்களை நேசிப்பவருக்கு எழுதுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களையும் எழுத தூண்டுங்கள்.
இல்லையேல் ‘ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதி, புறாவில் காலில் கட்டிய’ கதையை கேட்பதுபோல் எங்கள் சந்ததி நாளை கடிதக்கதையையும் கேட்கும்.
ஒருவரை உங்கள் வசமாக்க அவர்களுக்கு கடிதம் எழுதுங்கள் என்னும் விடயத்தை இவ்வளவு அருமையாக படமூலம் காட்டப்பட்டுள்ளது…
ஜனவரி 14, 2009
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சிவானந்தகுரு அவர்கள் 14-01-2009 புதன்கிழமை அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். பேபி – லண்டன் +44 2089520395 |
ஜனவரி 13, 2009
தலைப்பை பார்த்ததும் ஓடிவந்துவிட்டீர்களா…
தமிழ் சினிமாவில் பரதம், குச்சுப்புடி, டிஸ்க்கோ, பிறேக்… இப்படி எத்தனையோ நடனங்கள் வந்தும் இன்னும் ஏன் இந்த ‘பில்லி’ நடனம் வரவில்லை.
துருக்கி, எஜிப்த் உற்பட மேற்கு அராப் நாடுகளில் பிரபலமான இந்த நடனம் நம்ம டைரக்டர்களின் கண்ணுக்கு படவில்லையா?
சங்கர் சார் உங்கள் கண்ணுக்கு இந்த பதிவு பட்டால் உங்கள் எந்திரன் படத்தில் ரஜனியுடன் இந்த மங்கையை ஆடவிட்டால் உங்கள் எந்திரன் சூப்பர் கிட்! (கிண்டல் பண்ணவில்லை நீங்களே கீளே பாருங்கள்)
தமிழ் சினிமாவில் சிக்காத சிங்காரி + சிங்கார நடனம்!
ஜனவரி 10, 2009
தேவையான பொருள்கள்:
சின்ன உருளைக் கிழங்கு – 1 கிலோ
வெங்காயம் – 4
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
தாளிக்க – 4 டேபிள்ஸ்பூன் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
* நான் ஸ்டிக்கில் அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல் செய்யலாமே என்று நினைப்பவர்கள், அவசியம் செய்யுங்கள். ஆனால் மணிக் கணக்காக வதக்கினாலும், கிழங்கு முறுகலாக ஆகாமல், படுத்தி, போரடிக்கும் என்பதை பின்னர் புரிந்துகொள்ளலாம்.
உருளைக் கிழங்கு ரோஸ்ட் அதிக எண்ணையில்லாமல் செய்ய நினைப்பவர்களுக்கு:
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
குட்டீஸ் அப்படியே சாப்பிடலாம்.
சாப்பாட்டில் குழம்பு, ரசம், தயிர் என்று எல்லா சாதத்துடனும் சாப்பிடலாம். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலந்த சாதங்களுக்கும் உபயோகிக்கலாம்.
சப்பாத்தி, பூரிக்கு உபயோகிப்பதானால், இரண்டு பெரிய தக்காளி, மூன்று பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி, தாளிக்கும்போது சேர்த்துக் கொள்ளவேண்டும். தக்காளியின் நீர்ப்பசை நன்றாக வற்றிய பின்னர்தான் கிழங்கை வாணலியில் போடவேண்டும்.
-Jayashree Govindarajan
ஜனவரி 9, 2009
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கலியுகம் மொத்தம் 432,000 ஆண்டுகளாம். அதில் இதுவரைக்கும் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் நடந்து முடிந்துவிட்டன. இந்த கலியுகத்தில் தான் புத்தன், யேசு, முகம்மது நபி போன்றோர்கள் தோன்றினார்கள். கலியுகத்திலேயே இன்னும் மிச்சம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் போக வேண்டி இருக்கின்றதுவென பாருங்கள்.
இதற்கு முந்தைய யுகமான துவாபரயுகத்தை பார்த்தால் அதில் மொத்தம் 864,000 ஆண்டுகள் இருந்தனவாம். அது கிருஷ்ணா வாழ்ந்த மகாபாரதகாலம்.
அதற்கும் முன்பு இருந்த திரேதாயுகத்தில் இன்னும் அதிகமாய் 1,296,000 ஆண்டுகள் இருந்தனவெனவும் அக்காலத்தில் தான் இராமனும் வாழ்ந்தான் என்கின்றார்கள். அது ராமாயணகாலம்.
அதற்கும் முன்பு முதலாவதாக இருந்த யுகம் தான் சத்யுகம்.அதில் மொத்தம் 1,728,000 ஆண்டுகள் இருந்தனவென்கின்றார்கள். அக்காலம் தான் பூமியின் பொற்காலமாம். ஒவ்வொருவரும் 100,000 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார்களாமே.
இந்த நான்கு யுகங்களும் ஒரு சுற்றுசுற்றி வருதலின் பெயர் தான் ஒரு சதுர்யுகி (Chaturyugi). ஒரு Chaturyugi = மேலே எல்லாம் சேர்த்து மொத்தமாய் 4,320,000 ஆண்டுகள்.
கலியுகம் முடிந்ததும் என்னவாகும்? மீண்டும் பொற்காலமான சத்யுகம் தொடங்கி இன்னொரு Chaturyugi ஆரம்பிக்கும். இப்படியாக மொத்தம் 71 Chaturyugi உண்டாம். இந்த 71-ம் சேர்ந்தது ஒரு Manvantara( Manu) ஆகின்றது.நாம் இப்போது இருப்பது 28-ஆவது Chaturyugi-ல், 7-ஆவது Manu-வான Vaivasvat Manu-ல்.
பிரம்மாவின் ஒருநாள் ஒரு கல்பா (Kalpa) எனப்படுகின்றது. இது 14-Manuக்களை கொண்டது. அதாவது மொத்தம் 4,294,080,000 ஆண்டுகள். இந்த ஒரு நாள் முடிந்து பிரம்மா தூங்கப்போகும் போது மொத்த உலகமும் அழிந்து மறுநாள் அவன் விழிக்கும் போது புது உலகம் உருவாகும் என்பது நம்பிக்கை. ஆக வேதங்களின் படி இன்றைய உலகத்தின் மொத்த ஆயுட்காலம் 4,294,080,000 ஆண்டுகள். நாம் இருக்கும் இந்த 2008-ம் வருடம் வேதகாலண்டரின் படி 1,955,885,109-ஆவது வருடம்.
அப்போ இன்னும் 2338194891 வருடங்கள் பூமிக்கு ஆயுள் இருக்கு!
அதாவது பூமி இப்போ ஒரு இளைஞன்/இளைஞி!!!