தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க ஒரு அருமையான தளம் இது. தற்போதைய காலகட்டத்தில் பொரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது ஆங்கில அறிவை குறிப்பிடும் படி பெற்றுள்ளனர் என்றே கருதுகின்றேன்.

குறைந்தது இந்த கட்டுரையை வாசிக்கும் ஒருவருக்கு (கணணியை உபயேகிப்பவருக்கு) நிச்சயமாக ஆங்கிலத்தை சமாளிக்கத் தெரிந்திருக்கும். அதைவிட ‘பட்லர் இங்கிலீஸ்’ பேசுபவர்களும் நம்மில் அதிகம் பேர் உள்ளனர். அவர்களுக்கும் இது உதவியான ஒரு தளம்.

அதைவிட ஏற்கனவே ஆங்கிலம் தெரிந்தவர்களும் தமது புலமையினை சரிபார்த்துக்கொள்ளலாம்.

“ஒரு நல்ல நூல்

ஒரு நல்ல மனிதனுக்கு

ஒரு நல்ல சொத்தாகும்.

என அறிஞர் ‘வில்லியம் ஹாஸ்விட்’ கூறியிருக்கின்றார். இது நூல் வடிவில் இல்லாமல் மின் நூல் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஆங்கிலப்பாடம் அத்தியாயம் 1, 2, 3… என ஆரம்பத்தில் இருந்தே அழகாக விளக்கப்படுத்திக்கொண்டு செல்கின்றது. ஆரம்ப அத்தியாயங்கள் உங்களுக்கு அவசியம் இல்லை எனில், பிற அத்தியாயங்களை வலதுபக்கத்தில் உள்ள நிரல்களில் இருந்தும் தெரிவுசெய்து கொள்ளால்லாம்.

இங்கு கிளிக் பண்ணி, வாருங்கள் ஆங்கிலம் கற்போம்