என்றும் இல்லாத மாதிரி கனடாவில் இந்தநாட்களில் +7ºC க்கு வெப்பநிலை சென்றுள்ளது. வழக்கமாக -30ºC குளிர்நிலை உள்ள தருணம் இது.

இதுபற்றி நான் பேசிய அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சிதான்!

ஆனால் globel warming , சுற்றுப்புற சூழல்(enviroment)என்னும் கண்ணோட்டத்தில் என்ன நடக்கின்றது உலகில்?

துருவத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகுமாம்! கடல் மட்டம் உயருமாம்!! சில நாடுகள் நீரினுள் அமிழ்ந்து விடுமாம்!!! வெள்ளப்பெருக்கு ஏற்படுமாம் !!! ….

இதற்கு காரணம் ஒருவரை ஒருவர் குறை சொல்லி,  அரசியலாக்கப்பட்டு, குற்றத்தை அடுத்தவர் தலையிலே சுமத்தி நகர்த்தப்படுகின்றன.

கனடா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு பனிப்பெய்யாவிட்டால் மகா சந்தோஷம் தான்! நாளை கனடாவில் snowஎன்றொரு சாமான் கானாமல் போனால் குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்(snow வளிப்பது, snow விளையாடுவது  சம்பந்தமானவர்களைத் தவிர)

சாமானிய மக்களின் வீட்டு drivewayல் snow வளிக்கத் தேவையில்லை, காலைவேளையில் கார் clean பண்ணத் தேவையில்லை, snow tire மாத்தத்தேவையில்லை, உப்பு தூவத்தேவையில்லை, சுமக்கமுடியாதபடி அசெளகரிகமான உடைகளை உடுக்கத் தேவையில்லை, வீட்டுக்கு heater தேவையில்லை…

அரசாங்கத்திற்கும் செலவு குறைவுதான். வீதிகளில் உள்ள snowவை அகற்றுவதற்கென்றே பல மில்லியன்களை ஒவ்வொரு வருடமும் வாரி இறைக்கப்படுகின்றது. பல பல விபத்துக்கள், உதவிகள்…அனைத்தும் மக்களின் வரிப்பணம். snow விற்குப்பதிலாக மும்மாரி பெய்யும், விவசாயம் பெருகும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு கிட்டும்,

இன்னுமொரு பார்வையில் நோக்கினால், இந்த snow காலங்களில் பல பூச்சி, பூரான், சிலந்தி போன்று வேறு உயிரினங்களில் பெருக்கம் மட்டுப்படுத்தப் படுகின்றது.

புல்களுக்கும், செடிகளுக்கும் உண்டான பராமரிப்பு செலவு முற்றாக குறைக்கப்படுகின்றது.  மக்களும் அங்கு இங்கு என்று உல்லாசம் புரியாமல் செலவை குறைத்துக்கொண்டு வீட்டுக்குள் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுகின்றனர்.

வியாபார நோக்கில் பார்த்தால் இவர்களுக்கு பாதகம் தான். உப்புவிக்கின்றவர்களும், snow tireவிற்பவர்களும், snowவளிக்கும் உபகர்னங்களை விற்பவர்களும், snow அகற்றுவதை தொழிலாகக் கொண்டவர்களும், snowசறுக்கல் விளையாட்டை தொழிலாகக் கொண்டவர்களும் வருமானம் சுத்தமாக நின்றுவிடும்.

எனவே, கனடாவிற்கு snow தேவையா? இல்லையா?

Million dollar question இது!

அடடா… இந்த snowவில் வாழும் உயிரினங்களை மறந்துவிட்டோம். பனிக்கரடி, சீல்…போன்ற உயிரினக்களின் கதி என்ன? இவைகளின் தோல் கடும் குளிருக்குத்தகுந்த மாதிரித்தானே ஆண்டவர் படைத்திருக்கின்றார்! உலகம் வெப்பம் அடைந்தால் இவைகள் என்னசெய்யும்?

இதோ ஒரு நகைச்சுவை வீடியோ பாருங்கள்!