பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாயகமாக மாறிக்கொண்டுள்ளதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அல்கொய்தா மற்றும் தாலிபான்கள் அமைப்புக்களின் நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பாகிஸ்தான் மாத்திரமே. இனியும் பாகிஸ்தான் இப்பயங்கரவாத சக்திகளின் செயல்கள் தொடராத வண்ணம் கடும் நடிவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தான் கடும் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.

அது சரி, அப்பாவி தமிழரை அழிப்பதற்கு பாக்கிஸ்த்தான் பத்து நாட்களுக்கு ஒருமுறை கப்பலில் ஆயுதம் அனுப்புகின்றதே…? இதையும் சேர்த்து சொல்லியிருக்க வேண்டும் ஒபாமா!

எதிரியின் நண்பன் எமக்கும் எதிரிதான் என்னும் கண்ணோட்டத்தில்  பார்த்தால்…. “ஓங்கிப்போடு ஒபாமா…பாக்கிஸ்தானின் உச்சந்தலையில்…!” என்பதைத்தவிர வேறு என்ன சொல்லமுடியும்.