இன்று மாலை சன் டிவி செய்தியில் இந்திய(காங்கிரஸ்) வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது,

‘விடுதலைப்புலிகளும்-இலங்கை அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்…’

என கூறினார். அடேங்கப்பா…! புலிகளையும், தமிழரையும் கடந்த காலங்களில் கொஞ்சம் கிள்ளுக்கீரையாக எண்ணி அவரது நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்தது. புலிகள் மீது தமக்கு எந்த அபிமானமும் இல்லை என்றெல்லாம் கூறிவந்தார்.

இந்தவேளை, தமிழக மக்களின் போராட்டமும், புலம் பெயர்ந்த தமிழர்களின் எழுர்ச்சியும்  இன்று உலகம் – தமிழர்களின் போராட்ட நியாயப்பாட்டை கொஞ்சம் கொஞ்சம் உணரத் தொடங்கியுள்ளனர்.

மனிதச்சங்கிலி, கவனயீர்ப்பு போராட்டம், உண்ணாவிரதம், திக்குளிப்பு… என தமிழர்கள் பட்டையைக் கிளப்ப – உலமெல்லாம் தமிழர் மீது பார்வையை திருப்பியுள்ளன.

போகிற போக்கில்  பார்வையாளராக இருந்த அமெரிக்காவோ, ஐ.நாவோ மனதை மாற்றி,  களத்தில் நேரடியாக குதித்தால்…!!! இந்தியாவின்(காங்கிரஸின்) வல்லாதிக்க +  பழிவாங்கும் திட்டம் தவிடுபொடியாகும். அதற்குள் அவசரப்பட்டு தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்னும் நிலமை உருவாகியுள்ளதை உணர்கின்றனர். இன்னும் ஆட்சி அதிகாரம் சில நாட்களே உள்ளது. அதன்பின் அவர்கள் ஆட்சி அமைப்பார்களா என்று அவர்களுகே தெரியாது.

இந்தியா(காங்கிரஸ்) இப்போது அவசரப்பட்டு தமிழரைக் காப்பாற்றுகின்றேன் என்று தமது படையினரை அனுப்புவார்கள், அதற்கு எதிர்ப்பு தோன்றும் பட்சத்தில் பேச்சுவார்த்தையை மீண்டும் அவர்களே ஆரப்பிப்பார்கள். ஆனால் இம்முறை பேச்சுவார்த்தை என்றால் ராஜபக்சா “பாக்கிஸ்த்தான், சீனா” என்று பூச்சாண்டி காட்டி இந்தியாவுக்கு ஆப்பு வைப்பார்.

காங்கிரஸ் அரசு என்ன நினிக்கின்றது?

கொஞ்சம் நின்று நிதானித்தாலும் மேற்குலகம் இலங்கையில் காலூன்றிவிடும். அதைத்தான் தற்போது தமிழரும் விரும்புகின்றனர்.

தற்போதைய காங்கிரஸ் அரசு எதைச்செய்தாலும் நரியின் தந்திரம் அதனுள் இருக்கும். தமிழரும் இதனை நன்கு உணருவர்.

இனி இந்தியா(காங்கிரஸ்) என்ன செய்யப்போகின்றது?

இன்னும் சில தினங்களில் விடைதெரியும்.