‘ஸ்லம்டொக் மில்லியனர்’ என்ற திரைப்படத்திற்காக அண்மையில் நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக் கொண்டார். 

ஒரு தமிழருக்கு கிடைத்த ஒஸ்கார் விருதை இட்டு தமிழ் மக்கள் பெருமிதம் அடைய வேண்டும்.

வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே!

மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில், “இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று நிருபர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ரஹ்மான்,

இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் எவரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்” என ஒஸ்கார் புகழ் இசை நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்வதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திரு.மணிரத்னம், கவிப்பேரரசு.வைரமுத்து, இசைப்புயல் ரஹ்மான் இணைந்து இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பித்த இப் பாடலை இங்கு காணலாம்