இலங்கையில் ஓர் அமைதியை ஏற்படுத்தி அங்கு வாழும் தமிழர்களுக்கு ஒரு இனிய வாழ்வை ஏற்படுத்தினால் உங்களுக்குத்தான் நிச்சயம் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு!
அதனை உலகத்தில் உள்ள கோடான கோடி தமிழ் மக்களும் தரத்தயாராக உள்ளோம். வாங்க நீங்கள் ரெடியா?
அரிய சந்தர்ப்பம் தவற விட்டுடாதீங்க ஒபாமா!!
 
நடப்பு ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் ஒபாமா,பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் உள்ளிட்ட 205-பேர்களின் பெயர்கள் இந்தாண்டிற்கான நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

நோபல் பரிசிற்கான இறுதிப் பட்டியல் அக்டோபர் கடைசி வாரத்தில் தயாரிக்கப்பட்டு,டிசம்பர் 10-ம் தேதி அன்று வழங்கப்பட உள்ளன.ஜார்ஜியா பகுதியில் ஏற்பட்ட போரை அமைதி பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கும்,பிரான்ஸ் அதிபர் நிக்கோலசிற்கும் இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 
இவர்கள் மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களின் பெயகளும் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.நோபல் பரிசிற்கு அதிகமானவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன் கடந்த 2005-ம் ஆண்டு 199-பேர் பரிந்துரை செய்யப்பட்டதே இதுவரை அதிக பட்சமானதாக கருதப்பட்டது.ஆனால் தற்போது 205-பேர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது அனைவரின் கனவத்தையும் ஈர்த்துள்ளது.