வியாழன், மார்ச் 5th, 2009


seapas

செபஸ்தியாம்பிள்ளை பேணாட் குணசிங்கம்

(இளைப்பாறிய தொழில்நுட்ப நிர்வாக உத்தியோகத்தர் நிலஅளவைத் திணைக்களம்)

வல்வெட்டித்துறை, நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை பேணாட் குணசிங்கம் (05.03.2009) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை(பெரியதம்பி மரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், இரட்னேஸ்வரி(செலின்) அவர்களின் அன்புக் கணவரும், செல்வினி(அமெரிக்கா), நிரஞ்சினி (ஆசிரியை மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், வசந்தன் (அமெரிக்கா), றெஜினோல்ட்(உதவிப் பிரதேச செயலர், காத்தான்குடி) ஆகியோரின் அன்பு மாமனும், காலஞ்சென்ற S.B.குலசிங்கம் (பட்டயக் கணக்காளர்), S.A,இராஜசிங்கம் (இளைப்பாறிய வருமான வரி உத்தியோகத்தர்), S.அன்ரன் இரத்தினசிங்கம்    (கட்டட ஒப்பந்தகாரர்)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  விராஜ், நிறேஷ், றெனிஷ், அபினேஷ் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (08.03.2009) ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு இருதயபுர திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் ஆராதனையின் பின் மட்/கல்வி யங்காடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
S.அன்ரன் இரத்தினசிங்கம்
மற்றும் குடும்பத்தினர்.
நெடியகாடு,
வல்வெட்டித்துறை,
தொ.பே: 060 221 4677

 

பேச்சாளர் ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால், ஏராளமான நன்மைகள் உண்டாகும்னு பேச்சைத் தொடங்கினார்.

உடனே கூட்டத்திலிருந்த ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால் நன்மையா? என்னென்ன நன்மைகள்?னு கிண்டலா கேட்டாரு.

சிகரெட் பிடிப்பவனை நாய் கடிக்காது. அவன் வீட்டிற்குத் திருடன் வர மாட்டான். அவனுக்கு முதுமை வராதுன்னாரு பேச்சாளர்.

நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லையேன்னு கேட்டாரு அவர்.

நான் சொல்வது உண்மைதான். தொடர்ந்து சிகரெட் பிடிப்பவனால், இரண்டு கால்களால் நடக்க முடியாது. கையில் தடி ஒன்றைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பான்.கையில் தடி வைத்திருப்பதினால், அவன் அருகில் நாய் வராது.

இரவில் அவன் எப்பொழுதும் லொக், லொக் என்று இருமிக் கொண்டிருப்பான். எப்பொழுதும் சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதால், அந்த வீட்டில் திருடன் நுழைய மாட்டான்.

சிகரெட் பிடிப்பவன் இளமையிலேயே இறந்து விடுவான். அதனால், அவனுக்கு முதுமையே வராதுன்னு கூட்டம் கலகலப்படைய விளக்கினார் பேச்சாளர்.