புதன், மார்ச் 11th, 2009


நம்ம பிள்ளையாருக்கு முன்னால் போடும் தோப்புக்கரணம் தான் இந்த ‘SuperBrain Yoga’.

உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டு பிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம்.

முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

 அட, சாதாரணமாணவர்களுக்கும் இந்த தோப்புக்கரணம் மிக நல்ல பலனைக்கொடுக்கும்.

பிறகு என்ன, நேரம் கிடைக்கும் போது அப்பப்ப தோப்புக்கரணம் போடவேண்டியதுதானே? கல்யாணம் கட்டியவர்கள் உங்கள் மனைவிக்கு முன்னால் மட்டும் போட்டுவிடாதீர்கள்!??

மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

brainyoga1) இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.மேலும் இதுபற்றி கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்

2) வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

3) இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.

4) அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.

இந்த தோப்புக்கரணம் மூளையை நன்கு வளர்ச்சியடையச் செய்யுமாம். இயற்கையிலேயே மன அழுத்தம் உள்ள பிள்ளைகள்( ஆட்டிஸம்), மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கும் இது மிகவும் பயனுள்ள யோகாசனமாம்.

மேலும் இந்த வீடியோவை பாருங்கள் 

santhaluxmi

வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தலட்சுமி சோதிலிங்கம் அவர்கள் 07-03-2009 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற சோதிலிங்கம்(சோதியப்பா.முன்னாள் தலைவர்  அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சோதிமலர்(திருகோணமலை), சாந்தகுமார்(கண்ணன்/சின்னசாந்தன்.லண்டன்), கிருஸ்ணகுமார்(வன்னி), காலஞ்சென்ற விஜயகுமார்(மேஜர்.அசோக்), நவமலர்(வல்வெட்டித்துறை, அசோக்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கத்தியாகராஜா, காலஞ்சென்ற பழனிவேல், சந்திரலிங்கம்(கொழும்பு), வசந்தலட்சுமி(கொழும்பு), ஆகியோரின் அன்பு சகோதரியும்,  சர்வானந்தம்(திருகோணமலை), அன்னமயில்(லண்டன்), ஜெயலட்சுமி(வன்னி), நடராஜா(கட்டி.வல்வெட்டித்துறை), சுகந்தி(லண்டன்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-03-2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு Lambeth Cemetery & cremation ( Front of Tooting St.George’s Hospital)Blackshaww Road, Wandsworth, London SW17 0BY என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அசோக் – லண்டன் 

0044 2088679309
0044 7904003298
0044 7947620948