வெற்றிலையில் மை போட்டு பார்ப்பது பற்றி கேள்விப் பட்டிருக்கின்றோம். அது இப்போ கிட்டத்தட்ட நிஜ நிலைக்கு வந்துவிட்டது! ஆம் மாயாஜாலம் எல்லாம் காட்டலாம், நிஜமாகவே!

உங்கள் கழுத்தில் சிறு கமெரா, சிறு projector போன்றவற்றை தொங்கவிட்டபடி நீங்கள் நினைப்பதை பார்த்து, சாதித்துக் கொள்ளலாம்!

ஒரு புத்தகக்கடையில் புத்தகம் ஒன்றை வாங்க முற்படுகின்றீர்கள் என வைப்போம் உங்கள் உடம்பிலிருந்து புறப்படும் ஒரு ஒளிக்கற்றை (projector) அப்புத்தகத்தை பற்றிய விவரத்தை அப்புத்தத்திலேயே ஸ்கிரீனிட்டு காட்டினால் எப்படி இருக்கும்? அப்படியே அந்த ஸ்கிரீனை தட்டித் தட்டி வேறெங்காவது விலை குறைவாக இப்புத்தகம் கிடைக்குமாவெனவும் பார்க்கமுடிந்தால்..

பேருந்தில் செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். புதுப்படம் ஒன்று வெளிவந்திருக்கிறதாம். டிரயிலர் பார்க்க ஆசையா? உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் செய்யப்படும் அந்த ஒளிக்க்ற்றை YouTubeல் டிரயிலரை தேடி அதை   செய்திதாளிலேயே    வீடியோவாக காட்டும்.

கடிகாரம் கையில் இல்லை என வைத்துக்கொள்வோம். கையில் கடிகாரம் போல் ஒரு வட்டம் வரைந்தால் போதும் கைக்கடிகாரம் உங்கள் கையில் ஒரு ஒளிவட்டமாகத் தோன்றும்.

இப்படி இணைய கம்ப்யூட்டிங்கை கீபோர்டு இன்றி ஒளித்திரையின்றி அன்றாட பொருட்களின் மேல் செய்ய முனைந்திருக்கின்றார்கள். அங்கு உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் ஆகும் ஒளிக்கற்றையே திரை. உங்கள் விரல் அசைவுகளே தகவல் உள்ளீடும் கருவி.

கேமராவெல்லாம் வேணாம். நம்ம டைரக்டர்கள் இரண்டு கைகளையும் பிடித்துக் காட்டுவார்களே, அதே போல் விரல்களை கட்டமிட்டு காண்பித்தாலே படம் கிளிக்காகி விடும்.

கைத்தொலைப்பேசியும் வேணாம். கையிலேயே எண்களை புரஜெக்ட் செய்து காட்டி எண்களை தட்டி கால் செய்யலாம்.

இன்று எம் தமிழ் நெவிக்கேஷன் நெயர்களுக்கு என்ன எழுதுவது என்று இரவிரவாக முளித்திருந்து செய்திகள் சேகரிக்கத் தேவையில்லை. நினைத்தமாதிரியே பட் பட்டென்று அனைத்து விபரமும் என் மேசை மீது கொட்டப்படும்!

ஆகா… நினைக்கவே எவ்வளவு நல்லா இருக்கின்றது.

மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.