ஊறுகாய் என்றாலே வாயூறும். அதிலும் மீன் ஊறூகாய் (மீன் காய் இல்லையே) என்றால் சொல்லவும் வேண்டுமா? ஊறூகாய் போட என்றே மீனை வாங்கலாம் அல்லது மீ‌ன் அ‌திகமாக வா‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் அதை ஊறுகா‌ய் செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

தேவையான பொருட்கள்

மீன் (முள் நீக்கியது) – 1 கிலோ
இஞ்சி – 125 கிராம்
பூண்டு – 125 கிராம்
கடுகு – 60 கிராம்
மஞ்சள் பொடி – 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை – 1 கோப்பை
வினிகர் – 400 கிராம்
மிளகாய் வற்றல் – 60 கிராம்
சீரகம் – 35 கிராம்
உப்பு – 2 மேஜைக்கரண்டி
கடலை எண்ணெய் – 1/2 கிலோ
மிளகாய்தூள் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

1. மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. உப்பு, மிளகாய்த்தூள் தடவி 1 மணிநேரம் ஊர வைக்கவும்.

3. எண்ணெயை நன்றாக சூடாக்கி மீன் துண்டுகளை பொரித்தெடுக்கவும்.

4. இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

5. எண்ணெயை சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக்கவும்.

6. மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.

மீன் ஊறுகா‌ய் தயா‌ர்.