சனி, மார்ச் 28th, 2009


இன்று EARTH HOUR கொண்டாடப்படும் தினம். உலகத்தில் எந்த பாகத்தில் இருந்தாலும் இரவு 8.30ல் இருந்து 9.30 வரை உங்கள் மின்சார பாவனையை முற்றாக அணைத்துவிடுங்கள்.

ஒரு மணித்தியாலம் நீங்கள் இதனை செய்து உலகிற்கு ஒரு ஆக்கபூர்வமான ஆதரவினை தாருங்கள். ஒரு மணித்தியாலம் உங்கள் வீட்டு மின்சார உபகர்னங்களை நிறுத்தி, Lightக்ளை அனைத்து எம்மால இயலுமான இந்த ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ் நெவிக்கேசன் தாள்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.

நீங்கள் இந்த EARTH HOURக்கு என்ன செய்யப்போகின்றீர்கள் என ஓட்டுப்போடுங்களேன்…

இந்தி சினிமாவில் சல்மான் கான், ஜான் ஆப்ரஹாம், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் சட்டையை கழற்றி தங்களது சிக்ஸ் பேக் உடல் கட்டை காட்டும் ஸ்டைல் பிரபலம். அதே பாணி இப்போது தமிழ் சினிமாவில் பரவி வருகிறது.பொல்லாதவன் படத்துக்காக சிக்ஸ் பேக் உடல்கட்டை மாற்றிய தனுஷ், அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டையை கழற்றி நடித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா அதே போல நடித்தார்
சத்யம் படத்துக்காக சிக்ஸ் பேக் ஆன விஷால், இப்போது நடித்து வரும் தோரணையிலும் சட்டைஅணியாமல் பாடல் காட்சிகளில் நடித்துள்ளார்.அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய்யும் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவும் இது போல நடித்துள்ளனர்.
1977 படத்தில் சரத்குமாரும் தனது சிக்ஸ் பேக்கை காட்ட உள்ளார்.இந்தி சினிமாவில் சட்டை அணியாமல் நடித்த நடிகர்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம் இருப்பதாக பாலிவுட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதனால் ஆக்சன் காட்சிகளில் நடித்து ஆண் ரசிகர்களை கவரும் நம் நடிகர்கள், சட்டையை கழற்றி பெண் ரசிகைகளையும் கவர நினைக்கிறார்கள். அதனால்தான் இந்த ஸ்டைல் பரவி வருகிறது என்றார் இயக்குனர் ஒருவர்.

தமிழ் சினிமாவில் கிளாமர் என்ற வார்த்தையை இதுவரை ஹீரோயின்களுக்காக மட்டுமே பயன்படுத்திவந்தனர். இனி ஹீரோக்களிலும் கிளாமரை பார்க்கலாம்.

நானும் இரண்டுமாதம் ஜிம்முக்குப் போய்விட்டு என்சட்டையையும்… ஐயய்யோ…பின்னால பூரிக்கட்டை!