ஆரம்பத்தில் நடிகைகளின் முகத்தினை காட்டினார்கள்… கண், உதடுகள்…இப்படி என்னென்னவோ எல்லாம் காட்டிமுடித்து  இப்ப இது…

பின்னல் முதுகு, ஜன்னல் முதுகு, பார்த்தாலே பரவசமூட்டும் ‘ரன்வே’ முதுகு என்று புறமுதுகு காட்டும் நடிகைகளின் படங்கள்தான்நீங்கள் பார்ப்பது.

முகத்திற்கு செலவிடுகிற தொகையில் பாதியையாவது முதுகிற்கும் செலவிடுகிறார்களாம் இந்த நடிகைகள். சென்னையில் அமைந்திருக்கும் பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்களில் அமைந்திருக்கும் பியூட்டி பார்லர்கள்தான் இவர்களின் முதுகேற்றத்தில் அக்கறை காட்டி வருகின்றன. முதுகு காட்டி படுத்திருக்கும் இவர்களுக்கு விலையுயர்ந்த க்ரீம்களால் அபிஷேகமே நடக்கிறதாம்.

இத்தனை செலவு செய்து மேற்படி பிரதேசத்தை இவர்கள் அழகுபடுத்தி வருவதால், இந்த அழகு மைதானத்தை ஒரு முறையாவது திரையில் காட்டுங்கள் என்றும் இயக்குனர்களுக்கு கோரிக்கை வைக்கிறார்களாம்.