நேற்று இட்ட பதிவில் (1000km நடைப்பயணம்- ஆறு Toronto தமிழ் மாணவர் !!) Oprah Winfrey Showவில் இலங்கையில் ஒரு அமைதியான சூழ்நிலை ஏற்படவும், அங்குள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழும் நிமித்தம் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியான சூழ்நிலையை அங்கு துயலுறும் மக்களுக்காக 1000km தூரத்தை கால் நடையாக நடக்கும் அந்த அசாத்திய இளைஞர்களைப்பற்றி பார்த்தோம்.

இந்த உரம் மிக்க இளைஞர்களை, பார்ககும் முகமாகவும், அவர்களுக்கு ஒரு உற்சாகத்தை  கொடுக்கும்  முகமாகவும்  மொத்தமாக சுமார் 500km தூரத்தை, கிட்டத்தட்ட ஒரு நாளை செலவு செய்து, பார்த்து வந்துள்ளனர் சில ஆவலர்கள்!

இந்த இளைஞர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் தமது பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். அந்த இடத்தில் நேற்றுப்பெய்த மழையில் நனைந்துகொண்டு, ஆள் அரவம் அற்ற காட்டுபாதையில் கையில் ஒரு சிறிய Flash lightஐ அடித்தபடி உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடந்து செல்வதை காணக்கூடியதாக இருந்தது.

உயிரை ஏன் கையில் பிடித்துக்கொண்டு செல்கின்றனர் என்பதற்கு ஒரு சம்பவம் – அவ்வளியே இருளில் நடப்பதை சரியாக கவனிக்காத ஒரு லாறி, இந்த இளைஞர்களில் ஒருவரை மயிரிளையில் உரசிச்சென்றுள்ளது.

இதைவிட காட்டு விலங்குகளின் அட்டகாசம் வேறு! இந்த மாதிரி இடங்களில் கொடிய விலங்கான கயோட்டி(kayote) என்னும் ஓனாயின் குடும்பத்தை ஒத்த ஒரு விலங்கு சர்வசாதாரணம் என்பதை சொல்லத் தேவையில்லை.

இப்படிப்பட்ட பல இன்னல்களுக்கு மத்தியில் இந்த இளைஞர்கள் துணிவுடன் பயணம் மேற்கொள்ளுவதை கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும்!

தமிழ் உறவுகளே!

உங்களிடம் தாள்மையான ஒரு வேண்டுகோள். ஒவ்வொரு தமிழரும் ஒரு டொலர் பணத்தையாவது இந்த இளைஞருக்கு கொடுத்து உதவுங்கள்! நீங்கள் கொடுக்கும் அந்த சிறு ஊக்குவிப்புத் தொகையானது மழையில் நனையாமல் இருக்க ஒரு குடையையோ, இருட்டில் பிடித்துச்செல்லும் lightக்கு ஒரு பற்றரியையோ, இதமாக நடுங்கும் குளிரில் குடிப்பதற்கு ஒரு தேனீரையோ வங்குவதற்கு உதவும்.

அவர்களின் A/C விபரம்:

KRIS BALASINGAM

Bank of Montreal

A/C No: 0389 – 339 8258

 

செய்தியின் நம்பிக்கையின்மை உள்ளவர்கள் தகவலை சரிபார்த்துக் கொள்ள, அந்த இளைஞர்களின் வலைத்தளமான http://oprahgiveusavoice.com த்திற்குச் சென்று அவர்களின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுவிட்டு உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்.

இன்னுமொரு முக்கியமான விடயம்

இந்த இளைஞர்களை Oprah Winfrey Showவில் பங்குபெறுவதைத் தடுக்கும் முகமாக பல இடங்களில் இருந்து சிலர் தினமும் எதிர்ப்பு வேண்டுகோளை வைக்கின்றனர்.

அவற்றை முறியடிக்கும் முகமாக, நீங்கள் இந்த இளைஞர்களை பங்குபற்ற  வைக்கும்  முகமாக நீங்கள் ஒரு வேண்டுகோளை Oprah Winfrey க்கு கட்டாயம் அனுப்பிவையுங்கள்.

இவ்வாறு தினமும் ஒரு வேண்டு கோளைக்கூட நீங்கள் அனுப்பல்லாம். நீங்கள் அனுப்பப்போகும் வேண்டுகோள்கள் நிச்சயம் இந்த இளைஞர்களை அந்த Showவிற்கு செல்ல உறுதுணையாக இருக்கும். எனவே திரும்பத் திரும்ப தினமும் இந்த இளைஞர்கள் அங்கு சென்றடையும் வரை கட்டாயம் அனுப்பிவையுங்கள்.

கோரிக்கையின் கரு ‘நடைப்பயணமாக வரும் இந்த இலங்கைத் தமிழ் இளைஞர்களை உங்கள் Showவில் பங்குபற்ற வையுங்கள்’ என்பதனை ஒத்ததாக இருக்க வேண்டு.

(உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது. இதைக்கூட அப்படியே Copy & Past பண்ணி அனுப்பல்லாம். அல்லது உங்களுக்கு பிடித்தமாதிரி வேறு வசனங்களுடனும் அனுப்பல்லாம்.

வேறு யாரும் கூட நல்ல விதத்தில் எழுதத்தெரிந்தால் இங்கு Comments ல் தயவுசெய்து உதவவும். இரத்தினச் சுருக்கமாக ஒரு நாலு வரி இருந்தாலே போதும்)

 A group of six students have embarked on an incredible venture, they have decided to walk from Toronto Canada to Chicago in hopes of meeting you, so that you may highlight the ever worsening situation in Sri Lanka and be a foundation of the solution. They have braved the freezing Canadian weather and sacrificed much of their personal lives in full faith that you will redeem their efforts. We hope to bring a peaceful resolution to the conflict and we strongly believe that your support will get us there. +

 

வேண்டுகோளை விடுக்கும் இடண்டு பக்கங்கள் உண்டு. இவற்றை தனித்தனியே கிளிக்பண்ணி இரண்டிலும் கோரிக்கையை விடுங்கள். இரண்டும் வேறு வேறு நிர்வாகப்பிரிவினருக்கு செல்லுவதாகும் என்பதை நினைவில் கொள்ளுக.

1. E-MAIL THE PRODUCERS

2. E-MAIL THE OPRAH WINFREY SHOW