மார்ச் 2009


ஊறுகாய் என்றாலே வாயூறும். அதிலும் மீன் ஊறூகாய் (மீன் காய் இல்லையே) என்றால் சொல்லவும் வேண்டுமா? ஊறூகாய் போட என்றே மீனை வாங்கலாம் அல்லது மீ‌ன் அ‌திகமாக வா‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் அதை ஊறுகா‌ய் செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

தேவையான பொருட்கள்

மீன் (முள் நீக்கியது) – 1 கிலோ
இஞ்சி – 125 கிராம்
பூண்டு – 125 கிராம்
கடுகு – 60 கிராம்
மஞ்சள் பொடி – 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை – 1 கோப்பை
வினிகர் – 400 கிராம்
மிளகாய் வற்றல் – 60 கிராம்
சீரகம் – 35 கிராம்
உப்பு – 2 மேஜைக்கரண்டி
கடலை எண்ணெய் – 1/2 கிலோ
மிளகாய்தூள் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

1. மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. உப்பு, மிளகாய்த்தூள் தடவி 1 மணிநேரம் ஊர வைக்கவும்.

3. எண்ணெயை நன்றாக சூடாக்கி மீன் துண்டுகளை பொரித்தெடுக்கவும்.

4. இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

5. எண்ணெயை சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக்கவும்.

6. மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.

மீன் ஊறுகா‌ய் தயா‌ர்.

தமிழ் இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா… விஜய் வீடியோதான். 
பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ.


திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜய். அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள்.

குறிப்பாக, ‘உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை உருவாக்கப் பார்ப்பது ஏன்?’ என ஒரு லோக்கல் சானல் நிருபர் கேட்டு வைக்க என்ன பதில் சொல்வதென்று யோசித்த விஜய், இடையில் தன் ரசிகர்களைத் திட்டி அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாராம்.

‘ஏய்… பேசிட்டிருக்கோம்ல… சைலன்ஸ்…!’ என அவர் போட்ட சவுண்டு, படத்தில் வில்லன்களை எதிர்த்து அவர் வழக்கமாக விடும் சவுண்டை விட அதிகமாக இருந்தது. விஜய்யின் கோபத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த பிரபு தேவா மிரண்டு போய் பார்ப்பது வீடியோவில் தெரிகிறது.

பிரஸ் மீட் முடித்தபிறகு இந்த குறிப்பிட்ட காட்சிகளை வெளியிட வேண்டாம் என அன்பாகக் கேட்டுக் கொண்டாராம் விஜய்.

ஆனால் யாரோ ஒரு குறும்புக்கார கேமராமேன், இத்தனை நாட்கள் கழித்து அதை உலாவர வைத்துவிட்டார்.

இது பத்தாது என்று அவரை மேலும் கிண்டல் பண்ணி இன்னும் ஒரு வீடியோவும் வெளிவந்துள்ளது. அதை கீழே பாருங்கள்

 பல்லினக் கலாச்சாரம் கொண்ட இலங்கைத் தீவில், இப்போதும் வாழ்ந்து வரும் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. இன்றும் பலர் இலங்கையில் மொழியையும், இனத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கின்றனர். சிங்கள மொழியும், தமிழ் மொழியும் பல்வேறு பூர்வீக கலாச்சாரக் கூறுகளை கொண்ட மக்களை தன்னுள் உள்வாங்கியுள்ளன. சரித்திர காலத்திற்கு முந்திய தீபெத்தோ-இந்திய இனத்தை சேர்ந்த நாகா மக்கள் பற்றி தகவல்கள் குறைவு. ஆனால் பண்டைய இராசதானிகளின் அரசியல் தொடர்புகளால், தமிழகத்தில் இருந்து சென்று தென்னிலங்கையில் குடியேறி, தற்போது சிங்களவர்களாகி விட்ட மக்களைப் பற்றிய சரித்திர ஆதாரங்கள் உள்ளன.
 

பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிய ஐரோப்பியர் வருகை இனவிகிதாசாரத்தை மேலும் பன்முகப்படுத்தியது எனலாம். இலங்கையை படை எடுத்து கைப்பற்றிய போர்த்துகேய கடற்படை வீரர்கள் ஆண்களாக இருந்ததால், உள்நாட்டு பெண்களை திருமணம் செய்து பறங்கியர் என்ற புதிய இனத்தை உருவாக்கினர். போர்த்துக்கேயர்கள் ஆப்பிரிக்க அடிமைகளை தமது அமெரிக்க காலனிகளுக்கு கொண்டு சென்று குடியேற்றியது போல, இலங்கைக்கும் கொண்டு வந்தனர்.

இலங்கையின் மேற்குக் கரையில் புத்தளம் பகுதியில், விடுதலை செய்யப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளின் வம்சாவளியினர், இப்போதும் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயரால் “காபிர்” என்று பெயரிடப்பட்ட இந்த ஆப்பிரிக்க இன மக்கள், போர்த்துகேய, ஆப்பிரிக்க மொழிச் சொற்கள் கலந்த கிரயோல் மொழி பேசுகின்றனர். மேலும் “பைலா” என்ற ஆப்பிரிக்க வேர்களைக் கொண்ட இசை நடனமும் அவர்களது கலாச்சார தனித்துவத்திற்கு சாட்சி.

அண்மையில் தன்னார்வ குழு ஒன்றின் அனுசரணையின் பேரில், இலங்கையின் வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர்கள் சிலர், தமது நாட்டின் ஆப்பிரிக்க வம்சாவளி பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். அந்த வீடியோவை கிளே பார்வையிடலாம்.

வெற்றிலையில் மை போட்டு பார்ப்பது பற்றி கேள்விப் பட்டிருக்கின்றோம். அது இப்போ கிட்டத்தட்ட நிஜ நிலைக்கு வந்துவிட்டது! ஆம் மாயாஜாலம் எல்லாம் காட்டலாம், நிஜமாகவே!

உங்கள் கழுத்தில் சிறு கமெரா, சிறு projector போன்றவற்றை தொங்கவிட்டபடி நீங்கள் நினைப்பதை பார்த்து, சாதித்துக் கொள்ளலாம்!

ஒரு புத்தகக்கடையில் புத்தகம் ஒன்றை வாங்க முற்படுகின்றீர்கள் என வைப்போம் உங்கள் உடம்பிலிருந்து புறப்படும் ஒரு ஒளிக்கற்றை (projector) அப்புத்தகத்தை பற்றிய விவரத்தை அப்புத்தத்திலேயே ஸ்கிரீனிட்டு காட்டினால் எப்படி இருக்கும்? அப்படியே அந்த ஸ்கிரீனை தட்டித் தட்டி வேறெங்காவது விலை குறைவாக இப்புத்தகம் கிடைக்குமாவெனவும் பார்க்கமுடிந்தால்..

பேருந்தில் செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். புதுப்படம் ஒன்று வெளிவந்திருக்கிறதாம். டிரயிலர் பார்க்க ஆசையா? உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் செய்யப்படும் அந்த ஒளிக்க்ற்றை YouTubeல் டிரயிலரை தேடி அதை   செய்திதாளிலேயே    வீடியோவாக காட்டும்.

கடிகாரம் கையில் இல்லை என வைத்துக்கொள்வோம். கையில் கடிகாரம் போல் ஒரு வட்டம் வரைந்தால் போதும் கைக்கடிகாரம் உங்கள் கையில் ஒரு ஒளிவட்டமாகத் தோன்றும்.

இப்படி இணைய கம்ப்யூட்டிங்கை கீபோர்டு இன்றி ஒளித்திரையின்றி அன்றாட பொருட்களின் மேல் செய்ய முனைந்திருக்கின்றார்கள். அங்கு உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் ஆகும் ஒளிக்கற்றையே திரை. உங்கள் விரல் அசைவுகளே தகவல் உள்ளீடும் கருவி.

கேமராவெல்லாம் வேணாம். நம்ம டைரக்டர்கள் இரண்டு கைகளையும் பிடித்துக் காட்டுவார்களே, அதே போல் விரல்களை கட்டமிட்டு காண்பித்தாலே படம் கிளிக்காகி விடும்.

கைத்தொலைப்பேசியும் வேணாம். கையிலேயே எண்களை புரஜெக்ட் செய்து காட்டி எண்களை தட்டி கால் செய்யலாம்.

இன்று எம் தமிழ் நெவிக்கேஷன் நெயர்களுக்கு என்ன எழுதுவது என்று இரவிரவாக முளித்திருந்து செய்திகள் சேகரிக்கத் தேவையில்லை. நினைத்தமாதிரியே பட் பட்டென்று அனைத்து விபரமும் என் மேசை மீது கொட்டப்படும்!

ஆகா… நினைக்கவே எவ்வளவு நல்லா இருக்கின்றது.

மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

பாருங்கள் கிண்டலை…!

இரட்டைக் குழந்தை எப்படி பிறக்கின்றது என இப்படி நகைச்சுவை பண்ணியிருக்கின்றனர்…

லண்டன் பாபாவின் வரிகளுக்கு வேதம் புதிது  தேவேந்திரன் இசையமைப்புக்கு பத்மஸ்ரீ எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடிய உலகத்தமிழா எழுந்து வா — பாடல்

2012ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டிவிடும் என ஐ.நா. கூறியுள்ளது.

இந்த மக்கள் தொகை 2050ல் 900 கோடியாகவும் அதிகரிக்கக் கூடும்.

இந்தியா, அமெரிக்கா, சீனா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் காங்கோ குடியரசு ஆகிய நாடுகள் தான் மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கப் போகும் நாடுகள்.

வளர்ச்சியடையாத 49 நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் மிக வேகமான அளவாக ஆண்டுக்கு 2.3 சதவீதமாக உயரும். ண்களின் கருத்தரிப்பு விகிதம் 2.1 என்று குறையும் என்ற அனுமானத்தில் இந்த மதிப்பீட்டை ஐ.நா. வெளியிட்டுள்ளது.

உலக மக்கள் தொகையை சுடச்சுட பார்வையிட இங்கு கிளிக்பண்ணுங்கள்

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »