ஏப்ரல் 2009


Torontoவில் நடைபெறும் போராட்டத்திற்கு எனக்குத் தெரிந்த சகோதரி ஒருவர் இரவு வேலையை முடித்துவிட்டு, ஓய்வெடுக்காமல் அப்படியே போராட்டத்திற்கு வந்திருந்தார்.

கூடவே தனது இரு சிறு பெண் பிள்ளைகளையும் (பாடசாலைக்குச் செல்லாமல்) கூட்டி வந்து வீதியின் நடுவில் இருந்து உரக்க குரல் கொடுத்துக்                    கொண்டிருந்ததை  காணக்கூடியதாக இருந்தது.  இந்த சகோதரிக்கு இரவு வேலை ஒரு duty, அது முடித்து போராட்டத்திற்கு வருவதும் இன்னெரு ஒரு duty.

அந்த சகோதரியின் தமிழ் இன உணர்வு மெச்சத்தக்கது.

இதே போல் இன்னும் எத்தனையோ  பல  சகோதரர்கள், சகோதரிகள்,  பெரியவர்கள்… தமது இறுக்கமான நேரப்பழுவிற்குள்ளும், சில மணி நேரம் அங்கு வந்து  தமது பங்களிப்பை செய்து கொண்டிருக்கின்றனர்.

கதை எழுதியே தான் தமிழர்களின் தலைவன் என்று மார்தட்டும் கருநாநிதி தாத்தாவிற்கு, அவர் கதைவசனம் எழுதிய அவரின் பூம்புகார் படத்திற்கு நெத்தியடி ரீமெக்ஸ் கதைவசனம் எமக்கும் எழுதத்தெரியும் தாத்தா!

நாம் எழுதத் துவங்கினால் உங்கள் இதயம் தாங்காது தாத்தா…

தற்போது Torontoவில் நடைபெறும் போராட்டத்திற்கு அவரவர் தமது நேரத்திற்குத் தகுந்தது போல் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் – 8மணி நேரம் வேலையும், 8மணி நேரம் ஓய்வும், 8மணிநேரம் போராட்டத்திற்கும் என இதனை நாம் வகைப்படுத்தலாம்.

போக்குவரத்திற்கு 2மணிநேரம் எமக்கு தேவை எனினும் மிகுதி 6மணிநேரமாவது அங்கு நின்று எம் பங்களிப்பை தாராளமாக செலுத்தலாம்.

மாலை/இரவு வேலைக்குச் செல்பவர்களைக் கருத்தில் கொண்டு Guelph வாழ் மக்களில் யாராவது Torontoவில் நடைபெறும் போராட்டத்திற்கு நாளை காலை இங்கிருந்து புறப்பட்டு மதியம் வாக்கில் திரும்புவதற்கு, இலவசமாக செல்ல விரும்புபவர்கள் இங்கு Comments ல் உங்கள் பெயர்களை/ தொலைபேசி எண்ணை/ ஈ-மெயிலை பதிவுசெய்யவும். உரிய நேரத்தில் தொடர்பு கொண்டு ஆவன செய்யப்படும். 

இது போல் வேறு நேரங்களிலும் செல்வதற்கு வேறு யாராவது தொண்டு செய்யக் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

நேற்று நடைபெற்ற CGKW தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடலுக்கு Conservative MPயான மரியாதைக்குரிய Stephen Woodworth அவர்கள் தமது நெருக்கடியான நேரப்பழுவிலும் எம்மோடு இணைந்து கொண்டு எம்மக்களின் வேண்டுகோளையும், தனது கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டார்.  நாம் எதிர்பார்த்தது போல் எம் தமிழ் உறவுகள் அனனவரும் வந்து ஒரு மிகப்பெரிய ஆதரவினைத் தந்து, அந்த ஒன்றுகூடலை ஒரு ஆக்க பூர்வமான நிகழ்வாக அமைத்துக்கொடுத்தனர். எனவே அனைத்து CGKW தமிழர்களுக்கும் ஒருமுறை நன்றிகள்!

அங்கு என்றும் இல்லாதவாறு வெள்ளை இனத்தவர் சமூகம் அளித்து எமக்கு ஆதரவைத் தந்ததை இங்கு மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

அங்கு எம் தமிழ் மக்களின் வரலாற்றை பெரிய திரையில் படமாக ஒளிபரப்பியும், பலரது சிறப்பான நாவன்மையினாலும், அங்குவந்திருந்த மக்களின் ஒற்றுமையினாலும் இந்த Conservative MPயான Stephen Woodworth ஐ எம்பால் ஈர்த்துவிட்டோம் என்று தான் கூறவேண்டும்!  இதன் பலனாக இன்றிலிருந்து கனடியப் பாராளுமன்றத்தில் எமக்கு ஒத்தாசையாக இந்த MP இனி விளங்குவார். இந்த மகத்தான செயல்/பெருமை Cambridge, Guelph, Kitchener மற்றும் Waterloo வாள் தமிழ் மக்களையே சாரும்!

மிகவும் சிறிய எண்ணிக்கையில் தமிழ் மக்களைக்கொண்ட இந்த பிரதேசத்தில் இவர்கள் செய்த காரியம் மலையை நகர்த்திய எறும்புகளுக்கு ஒப்பிடுவதைத்தவிர வேறு என்னவென்று சொல்லமுடியும்!

தமிழ் மக்கள் அனைவரும் இனி இதுபோன்ற மலையை நகர்த்தும் வேலைகளை மேற்கொண்டோமேயானால் எம் விடியலுக்கு செல்லும் பாதை திறக்கப்படும்!

மதிப்பிற்குரிய Conservative MP Stephen Woodworth க்கு நன்றி செலுத்த:

Kitchener Office:Suite 12, 300 Victoria Street North,
Kitchener ON N2H 6R9
Telephone 519-741-2001
Fax. 519-579-2404
Email woodworth.s@parl.gc.ca
Kitchener, Ontario

 

Ottawa Office:

Room 334, Confederation Building
House of Commons
Ottawa ON K1A 0A6
Telephone 613-995-8913
Fax. 613-996-7329
Email woodworth.s@parl.gc.ca

 

Cambridge, Guelph, Kitchener மற்றும் Waterloo(CGKW Tamils) வாழ் தமிழர்கள் Guelphல் ஒன்றுகூடும் இடம்

Centennial CVI, 289 College Avenue West, Guelph.
CGKW தமிழர்கள் அனைவரையும் இன்று (25ம் திகதி) மாலை 4 மணிக்கு அங்கு எதிர்பார்க்கின்றோம்.

Vodpod videos no longer available.

 

 

 

 

 

2009_Aug_10_103718__111

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 21.04.2009 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை பாலமணி தம்பதிகளின் அன்புமகனும், தங்காதேவியின் அன்புக்கணவரும், உதயகுமார்(இந்தியா), கலாராணி(சுவிஸ்), உதயராணி(லண்டன்), காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் யோகேஸ்வரராஜா கலாராணி சுவிஸ்

உதயகுமார் – இந்தியா 0091 4312782342
கலாராணி – சுவிஸ் 0041 617022714
உதயராணி – லண்டன் 0044 2086460086

அடுத்த பக்கம் »