கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணிமுதல் 12 மணிவரை தமிழர்களின் தெற்காசிய விழா நடத்தப்படவேண்டுமா அல்லது வேண்டாமா என்ற கருத்துக்கணிப்பு TVi யில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து Cmr ல் சனிக்கிழமை பகல் 11:30 தொடக்கம் மதியம் 1 மணிவரையும் அதே கருத்துக்கணிப்பு நடைபெற்றது.

இந்த நேரடி ஒளி, ஒலி பரப்புகளில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்த நேயர்களுக்கும், கலந்துகொள்ள முயற்சித்த அனைத்து நேயர்களுக்கும் TVi/Cmr ஊடகங்கள் தமது நன்றியை தெரிவித்துகொள்கின்றன.

தாயகத்தில் எமது உறவுகள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழர்களின் தெற்காசிய விழா நடத்துவதன் மூலம் ஏற்படும் நன்மை தீமைகளை விளக்கி அது பற்றி நேயர்களின் கருத்துக்களை பெற்று அவற்றை ஆராய்ந்து ஒரு முடிவினை பெறும் நோக்கோடு நடத்தப்பெற்ற இந்த கருத்துக்கணிப்பில், 70% க்கும் அதிகமான நேயர்கள் இவ்விழாவை எழுச்சியாகவும், இதன் பலாபலன்கள்; எமது மக்களை சென்றடைய வேண்டுமென்றும் தெரிவித்திருந்தனர்.

 ஏறத்தாழ 30 % நேயர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். நேயர்களின் பல்வகைப்பட்ட கருத்துக்கள,; எண்ணப்போக்குகள், பல்கோணப்பார்வை கொண்ட ஆலோசனைகள் என்பனவற்றை ஆராய்ந்து அதன் பிரதிபலிப்பாக மக்களின்; உணர்வுகளை மதித்து இவ்வாண்டு தமிழர்களின் தெற்காசியவிழாவை நடத்துவது இல்லை என்ற முடிவை உறவுகளின் நலனை முன்னிலைப்படுத்தி நிற்கும் Tvi/Cmr ஊடகங்கள் எட்டியுள்ளன.

 இவ்வாறு Tviயில் அறிவிக்கப்பட்டது!

 என்னப்பா இது குழப்புகின்றார்களே…!

70% மான மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தும், அந்த 30% மக்களுக்காக ஏன் பல்கோணப்பார்வையும், எண்ணப்போக்கும் என்று கூறுகின்றார்கள்? 

கருத்துக்கணிப்பென்னும் போது அதிக மக்கள் எதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதைத்தானே கணக்கிடப்பட வேண்டும்? 

அப்படியாயின் அந்த அதிகபடியான மக்களின் ஆதரவு என்பது எந்தவகையில் கையாளப்பட்டுள்ளது????!!!!

யாராவது பதிலளிப்பார்களா?

Advertisements